சென்னை, டிச. 16- சட்டப் பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத் தொடர் முடிவடைந்த 6 மாதத்துக் குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த மே மாதம் தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் முடிவுற்ற நிலை யில், கடந்த அக்.17ஆம் தேதி பேரவையின் மழைக் கால கூட்டம் தொடங்கியது.
அக்.18, 19 ஆகிய 2 நாட்களும் சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. பேரவை முடிவடையும் நாளில், ஆன்லைன் ரம்மி உள் ளிட்ட இணைய விளை யாட்டுகளுக்கு தடை, ஹூக்கா பாருக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக் கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், தேதி குறிப் பிடாமல் பேரவை தள்ளி வைக்கப்படுவதாக பேர வைத் தலைவர் மு.அப் பாவு அறிவித்தார்.
இந்நிலையில், கடந்த அக்.17இல்கூடிய இந்த ஆண்டின் கடைசி கூட் டத்தொடரை முடித்து வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு அர சிதழில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும். ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும்.முன்னதாக, கூட்டம் நடத்துவதற் கான தேதிகளை முடிவு செய்து, ஆளுநரின் ஒப்பு தல் பெறப்படும். அதன்படி கூட்டம் நடைபெறும்.
அடுத்த ஆண்டில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை பொங் கல் விழாவிற்கு பிறகு நடத்தலாமா என ஆலோ சனை நடத்தப்பட்டு வரு வதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment