சென்னை, டிச.11 திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த போராளிகளுக்குத் தமிழ் நாடெங்கும் வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றன.
விவரம் வருமாறு:
இலால்குடி
இலால்குடி மாவட்டத்தில் 25.11.2022 அன்று ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடை பெற்றது. முன்னதாக ஜாதி ஒழிப்பு வீரர்கள் கழகக் கொடி ஏற்றி வைத்தார்கள். வீரர்களுக்கு மாவட்ட தலைவர் தே.வால்டேர் சிறப்பு செய்தார். மாவட்ட செயலாளர் ஆ. அங்கமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வா. குழந்தை தெரசாள் தலைமை வகித் தார். திராவிட மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, கழக சொற்பொழிவாளர் யாழ். திலீபன் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மண்டல, மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.
பிச்சைமணி நன்றியுரையாற்றினர்.
சுரண்டை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் 25.11.2022 அன்று தென் காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வே.ஜெயபாலன் தலைமையில் நடை பெற்றது.
ஈரோடு -சூரம்பட்டிவலசு
இந்திய அரசியல் சட்டம் ஜாதியை பாதுகாப்பதை கண்டித்து தலைவர் தந்தைபெரியார் ஆனையை ஏற்று 1957 நவம்பர் 26- ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்போர் அரசியல் சட்டத்தை கொளுத்தி 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அனுபவித்த ஜாதி ஒழிப்பு பேராளிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் ஈரோடு சூரம்பட்டிவலசில் 26.11.2022 மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
அமைப்பு செயலாளர் த.சண்முகம் தலைமை உரை யாற்றினார், மண்டலத்தலைவர் இரா.நற்குணம், மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், நகர செயலாளர் தேவராஜ்,குருவாரெட்டியூர் சத்தியமூர்த்தி, ஜெயராணிபவானி அசோக், ஆகியோர் முன்னிலை யேற்றனர்
கூட்டத்தை தொடங்கிவைத்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.
கோபி.வெ.குமாரராஜா, பேராசிரியர் ப.காளிமுத்து
ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
மேட்டுப்பாளையம்
26.11.2022, சனி மாலை 4:30 மணி அளவில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு, ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் சு.வேலுசாமி தலைமை வகித் தார். மாவட்ட கழக காப்பாளர், சாலை வேம்பு சுப்பையன் முன்னிலை வகித்தார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் மு வீரமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர், நா.இராவணன் பிரதீப், கோவை மாவட்ட துணைச் செயலாளர் தி.க.காளிமுத்து, காரமடை ஒன்றிய கழக தலைவர் அ.மு.ராஜா, மற்றும் திருவள்ளுவன், லியாகத், நாராயணன், முருகேசன், ரங்கசாமி, தியாகராஜன், ஜெபஸ் டின், குருசாமி, உத்திரிநாதன், வேணுகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
நிறைவாக நகர செயலாளர் வே.சந்திரன் நன்றி யுரையாற்றினார்.
வாலாஜாபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் 25.11.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமையில் மண்டலத் தலைவர் பு.எல்லப்பன் முன்னிலையில் வாலாஜா. த.க.ப புகழேந்தியின் முழு ஏற்பாட்டில் சொற்பொழிவாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், பொதட்டூர் புவியரசன், காஞ்சி கதிரவன் சிறப்புரையாற்றினார்கள். ம.தி.மு.க. முரு கானந்தம், சிப்காட் ராஜா, பொன்.வெங்கடேசன், செ.கோபி, த.அன்பு, பொ.பெருமாள், மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இறுதியாக தமிழ்வாணன் நன்றி கூறினார். இரவு 9.40க்கு கூட்டம் நிறைவுற்றது.
இலால்குடி
தமிழர் தலைவர் 90ஆவது பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் இலால்குடி கழக மாவட்டம் சார்பாக நடத்தப்பட்டது. 28.11.2022 அன்று மாலை 6 மணிக்கு குமுளூர் -சவுக்கு மண்டியிலும், இரவு 8 மணிக்கு பெருவளப்பூர் -சாமிநாத புரத்திலும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றது.
கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மாவட்ட தலைவர் தே.வால்டர், மாவட்ட செயலாளர் ஆ. அங்கமுத்து, ஒன்றிய தலைவர் மு. திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடிவள்ளல், ஒன்றிய இளைஞரணி தலைவர் சா. இசைவாணன், தெ. பிரதீப், மை.மோகன், குமுளூர் ஊராட்சி செயலாளர் சி. அருண்குமார், வெ. சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்
சி. வீரமணி, ஒன்றிய செயலாளர் சா. பன்னீர் செல்வம், செங்கோல்ராணி, வேலுசாமி, மார்ட்டின், வ.ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கெஜல் நாயக்கன்பட்டியில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நவம்பர் 28 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ் தலைமையில், மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் வரவேற்பில், மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், வே. அன்பு (மாவட்ட செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்), கந்திலி தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் ஜி.அசோக்குமார், கு.ராஜமாணிக்கம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தி.மு.க., ஜி.சி.சாந்த சீலன் ஊராட்சி மன்ற தலைவர் தோக்கியம், ஜி.அசோக்குமார் ஆகியோரின் முன்னிலையில் நடை பெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார், காஞ்சி பா.கதிரவன் மற்றும் ப. க.மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் ஆசிரியர் அவர்கள் எழுதிய 10% இட ஒதுக்கீடு உயர் ஜாதி வகுப்பினருக்கு கூடாது ஏன்? என்ற புத்தகமும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் எழுதிய ஜாதி - தீண்டாமை ஒழிப்பு அறப்போர் - ஏன்? என்ற புத்தகமும் கொடுக்கப் பட்டன. எ.சிற்றரசன் - மண்டல இளைஞரணி செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை ஒன்றியம், பாலையம்பட்டி பெரியார் திடலில், 28.11.2022 அன்று மாலை 6.30 மணிக்கு, ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ப.க. புரவலர் ந.ஆனந்தம் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் நிகழ்வை ஒருங் கிணைத்து வழிநடத்தினார். மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர் வரவேற்புரையாற்றினார். நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், மாவட்ட கழக துணை அமைப்பாளர் பெ.சந்தனம், மாவட்ட ப.க. அமைப்பாளரும் சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி ஆகியோரது உரைக்குப் பின், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு அவர்கள் சிறப்புரையாற்றினார். நிறைவாக மாநில திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றை விளக்கி நிறைவுரையாற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர் அ.தங்கசாமி, மாவட்ட ப.க. துணை அமைப்பாளர் மா.பாரத், அருப்புக்கோட்டை நகர ப.க. செயலாளர் பூ.பத்மநாதன், நகர கழக தலைவர் சு.செல்வராசு, இளைஞரணிச் செயலாளர் க.திருவள்ளுவர், கவிஞர் நா.மா.முத்து, ஆயை.மு.காசாமைதீன், சி.பி.அய். தோழர் அ.இளங்கோ, கத்தார் நா.நாராயணன், ம.தி.மு.க. தோழர் பா.நாகராசன், பாலையம்பட்டி தி.மு.க. செயலாளர் யோ.இளம்பாரதி, க.வேல்ச்சாமி, சு.யோகீசுவரன், பாலையம்பட்டி கழக கிளைச் செயலாளர் இரா.மலையரசன், முத்துக்குமார், மாணவர் கழக தோழர்கள் மு.புகழேந்தி, நா.அறிவழகன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள், தோழமை இயக்க நண்பர்கள், பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இறுதியாக அருப்புக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் இரா.முத்தையா நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment