சென்னை,டிச.17- தூத்துக்குடி மாவட் டத்தில் திருடுபோன 500 ஆண்டு பழைமை வாய்ந்த நடராஜர் உலோகச் சிலையை பிரான்சில் ஏலம் விட தயாரானபோது, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள் ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேசுவரர் கோயிலில் கடந்த 1972-ஆம் ஆண்டு 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலை திருடு போனது. இதுகுறித்து கோவில்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு தனியார் ஏல மய்யத்தில், அந்த நடராஜர்சிலை நேற்று முன்தினம் (15.12.2022) ஏலம் விடப்பட உள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிலையின் ஆரம்பத் தொகையாக 20 ஆயிரம் யூரோ முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, அய்ஜி தினகரன் தலைமையிலான காவல்துறையினர் இந்திய தொல்லியல் துறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும், பாரிஸில் உள்ள இந்திய தூதரக அதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நடராஜர் சிலையை ஏலம் விடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த சிலையை பிரான்சிலிருந்து தமிழ்நாட்டுக்கு 3 மாதத்துக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு சிலை கடத் தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் மேற் கொண்டுள்ளனர். அப் பிரிவு காவல் துறை யினருக்கு காவல்துறை தலைமை இயக்கு நர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment