ICHR எனப்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில், ஒன்றிய அரசின் சார்பில் 1972-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்றாளர்கள் பொறுப்பேற்று நடத்திய அமைப்பு. மோடி அரசு பதவியேற்றது முதலே முழுக்க ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ஆக்கப்பட்ட அமைப்புகளுள் இதுவும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ்.சின் நேரடி அமைப்பான அகில பாரதிய இதிகாஸ் சங்கலன் யோஜனா என்ற அமைப்புக்கும் இதற்கும் ஒரே கதவுதான். இதில் நுழைந்தால் தான் அங்கே செல்லலாம் என்று ஆக்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு குடும்ப ஆதிக்கம் வேறு.
இந்த ICHRக்கு புதிய சின்னம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் ஒன்றிய அரசினர். சின்னத்திலேயே அப்பட்டமான சமஸ்கிருதத் திணிப்பு. குறிக்கோள் வாசகமே சமஸ்கிருதத்தில் தான்!
சின்னத்தின் நடுவிலிருக்கும் முடிவிலா முடிச்சு எனப்படும் ஆன்மீக முடிச்சு (spritual knot) என்பது இந்தியாவின் ஆன்மீக சக்திகளிலிருந்து எழுவது. இது இதிகாசங்களின் அறிவியலையும் மற்றும் வரலாற்றையும் குறிக்கும் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
வரலாற்றுக்கும் மேலே சொல்லப்பட்டிருக்கும் உளறல்களுக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்?
- சமா
No comments:
Post a Comment