ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி மல்லிகார்ஜுன கார்கே - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

ஒற்றுமையுடன் தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி மல்லிகார்ஜுன கார்கே

கலபுருகி, டிச.11 நாம் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

 அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற பின்பு நேற்று (10.12.2022) முதல் முறையாக தனது சொந்த ஊரான கலபுரகிக்கு மல்லிகார்ஜுன கார்கே வருகை தந்தார். கலபுரகியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கேவை, கருநாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜே வாலா, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் திறந்த வாகனத்தில் மல்லிகார்ஜுன கார்கே அழைத்து செல்லப்பட்டார். வழி நெடுகிலுயிலும் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினார்கள். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு பேசியதாவது 

கருநாடக மாவட்டங்களின் வளர்ச்சிக்காக 10 முக்கிய திட்டங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, நீர்ப்பாசன திட்டங்கள், பெண்களுக்காக தனியாக கல்லூரி திறப்பு உள்பட 10 முக்கிய திட்டங்களை கொண்டு வந்து காங்கிரஸ் செயல்படுத்தும்.  கருநாடக மாவட் டங்களின் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். அந்த ரூ.1,500 கோடி நிதியை மற்ற மாவட்டங்களுக்கும், பிற துறைகளின் வளர்ச்சிக்காகவும் பசவராஜ் பொம்மை ஒதுக்கினார். 

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள மாவட்டங்கள் எப்படி வளர்ச்சி அடையும். ஒற்றுமையாக இருந்து உழைத்ததால்... இமாசல பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், கருநாடகத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக கருநாடகத்தை சேர்ந்த நான் இருந்து வருகிறேன். எனக்கு பெருமை சேர்த்து கொடுக்கும் விதமாக கருநாடகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்

கருநாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பல பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக இருப்பார்கள். அவர்களை போன்று நம்முடைய தலைவர்களும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து உழைத்தாலே கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. எனவே தலைவர்கள் ஒற்றுமையாக இருந்து சட்ட சபை தேர்தலில் வெற்றிக்காக உழைக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இல்லாமல் சட்டசபை தேர்தலை சந்தித்தால், அது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். எனக்கு வேண் டியவர்கள், வேண்டாதவர்கள் யாரும் இல்லை.  முதலமைச்சர் யார். அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் என்ப தையும் மேலிடம் தீர்மானிக்கும். காங்கிரசின் வெற்றிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கும்படி கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார். 


No comments:

Post a Comment