புதுச்சேரி புத்தக திருவிழாவில் கழக பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 31, 2022

புதுச்சேரி புத்தக திருவிழாவில் கழக பொறுப்பாளர்கள்

புதுச்சேரி, டிச. 31- புதுச்சேரி யில் கடந்த 15.12.2022 முதல் 25.12.2022 வரை புத்தக திருவிழா வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. 

புத்தகச் சந்தையில் கழக வெளியீடுகள் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எண். 3இல் விற்பனைக்கு வைக்ப்பட்டிருந்தது. ஏராளமான தோழர்கள் கட்சிப் பாகுபாடு இன்றி நூல்களை வாங்கிச் சென்றனர். 24, 25 ஆகிய 2 நாட்கள் கழகத் தோழர் கள் புத்தகங்களை நமது கடையில் வாங்கிச் சென் றனர். 

புரட்சிக் கவிஞரின் பெயரன் கவிஞர் கோ.செல்வம், புதுச்சேரி ராம் நகர் பெரியார் தொண்டர் திருச்சி திருநாவுக்கரசு, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், உழவர்கரை நகராட்சி கழக மேனாள கழக அமைப்பாளர் ஆ.சிவரா சன், புதுச்சேரி மண்டல கழக செயலாளர் கி.அறிவழகன், கழக தோழர் கா.நா.முத்துவேல், புதுச் சேரி மண்டல கழக அமைப் பாளர் இர.இராசு, கழக பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் கைலாச நெ.நட ராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் அனைவரை யும் புத்தக நிலைய விற் பனையாளர் கள் பி.அர்ச் சுனன் பி.சிரஞ்சீவி ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment