புதுடில்லி. டிச. 8- டில்லி மாநக ராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவ டைந்தது. மொத்தம் 250 வார்டுகளில், ஆளுங்கட் சியான ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களி லும், சுயேட்சை 3 இடங் களிலும் வெற்றி பெற்றன. ஏற்கெனவே மூன்று முறை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக இந்த முறை தோல்வியை சந் தித்துள்ளது..
வெற்றி குறித்து கூறிய மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டில்லியில் பணியாற்ற பாஜக மற்றும் காங்கிர ஸின் ஒத்துழைப்பை நான் விரும்புகிறேன். நான் ஒன் றிய அரசிடம் முறை யிட்டு, டில்லியை சிறப் பாக மாற்ற பிரதமரின் வாழ்த்தினை வேண்டுகி றேன். எம்சிடியை ஊழ லற்றதாக மாற்ற வேண் டும். இன்று, டில்லி மக் கள் ஒட்டுமொத்த தேசத் திற்கும் ஒரு செய்தியை வழங்கியுள்ளனர் என்று கூறினார்.
ஆம் ஆத்மி 134 இடங் களில் வெற்றி பெற்று மாநகராட்சியை முழு மையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களி லும், சுயேட்சை 3 இடங் களிலும் வெற்றி பெற்றன.
15 ஆண்டுகளாக தொடர்ந்து டில்லி மாநகராட்சியை ஆட்சி செய்து வந்த பாஜக 104 இடங்களையும் கைப் பற்றி எதிர்க்கட்சி வரிசை யில் அமர்ந்தது. ஏற்கெ னவே மூன்று முறை மாந கராட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா இந்த முறை ஆம்ஆத்மியிடம் மாநகராட்சியை பறிகொடுத்துள்ளது.
No comments:
Post a Comment