புதுடில்லி, டிச.8 பெரும்பான்மையைப் பயன் படுத்தி மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதா? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேள்வியெழுப்பி யுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து மேற்கு வங்காள மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா டில்லியில் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக் களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இந்த மசோதாக்கள், மாநில விவகாரங்களில் தலையிடுவதாக உள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு குரல் கொடுத்தால், ஆளுங்கட்சி தனது பெரும்பான்மையை பயன்படுத்தி, வாக்கெடுப்பு கூட இல்லாமல் வலுக்கட்டாயமாக மசோதாவை நிறை வேற்றுவதை பார்த்து இருப்பீர்கள். தேர்வு குழு, நிலைக்குழு ஆகியவற்றின் அறிக்கை களை கூட ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்வது இல்லை. இதனால், நாடாளுமன்ற ஜன நாயகத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.
இதுவரை பாதுகாக்கப்பட்ட கவுரவமும், மரியாதையும் தொடர்ந்து பாதுகாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஜனநாயகத்தில் எத் தனையோ அரசியல் கட்சிகளும், சித்தாந்தங் களும் இருந்தாலும், நாடாளுமன்ற பெரும் பான்மைதான் எப்போதும் வெற்றி பெறுகிறது. அதற்காக எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை எங்கள் கட்சி துணிச்சலாக எதிர்க்கும். மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment