திருப்பத்தூர், டிச. 3- திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்டி யில் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டம் 28.11.2022 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்சிக்கு கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ் தலைமை யில், மாவட்ட செயலாளர் பெ. கலை வாணன் வரவேற்பில், மாவட்ட தலை வர் கே. சி. எழிலரசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வே. அன்பு, தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் ஜி. அசோக்குமார் கந்திலி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தி. மு. க. கு. ராஜமாணிக்கம், ஊராட்சி மன்ற தலைவர் தோக்கியம் ஜி.சி.சாந்த சீலன், ஜி.அசோக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் மற்றும் காஞ்சி பா. கதிரவன் மற்றும் ப.க. மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர்.
இதில் கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் ஆசிரியர் அவர் கள் எழுதிய "10% இட ஒதுக்கீடு உயர் ஜாதி வகுப்பினருக்கு கூடாது-ஏன்?" என்ற புத்தகமும், கவிஞர் கலி பூங்குன் றன் அவர்கள் எழுதிய "ஜாதி - தீண் டாமை ஒழிப்பு அறப்போர் - ஏன்?" என்ற புத்தகம் கொடுக்கப்பட்டது.
மண்டல இளைஞரணி செயலாளர் எ.சிற்றரசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment