புதுச்சேரி, டிச. 13-- புதுச்சேரி மூலக்கு ளம் மேனாள் தலைமைக் காவலர் கோவிந்தராசு துணைவியாரும் பகுத்தறிவாளர் கழக புதுச்சேரி மண்டல தோழர் தமிழ்ச்செல்வன் தாயாருமான முத்தாலம்மாள் நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி மூலக்குளத்தில் 10.12.2022 அன்று காலை 11:00 மணி முதல் ஒரு மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந் திரசேகரன் தலைமை ஏற்று படத் தினை திறந்து வைத்து அரியதொரு நினைவுரை ஆற்றினார்.
தோழர் தமிழ்ச்செல்வன் வர வேற்புரை ஆற்றினார். புதுவை வே.அன்பரசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மண்டல தலைவர் இரா.சட கோபன், மண்டல செயலாளர் அறிவழகன், மண்டல அமைப் பாளர் ராஜு, சேதராப்பட்டு ராஜி, லோ.பழனி, அரியாங்குப்பம் குமார், இருசாம்பாளையம் இளங் கோவன், சிவராஜன், குப்புசாமி, மூலக்குளம் நடராசன், அரியாங் குப்பம் சடகோபன், தமிழ் அறிஞர் அருளி, தமிழ நம்பி, தாமரை, கோ.பாகூர், தாமோதரன், அதிரடி அழகானந்தம், செய்த தமிழ் நெஞ்சம், சீனு தமிழ்மணி, பாலமுருகன், கோ.சாந்தி, கோ.ரகு மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment