தாம்பரம் நகரில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

தாம்பரம் நகரில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

தாம்பரம்,டிச.23"ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு"வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 27.11.2022 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 

6 மணியளவில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை பாரதி திடலில்  நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை தாங்கினார். தன் உரையில் ஜாதி ஒழிப்பு போராளிகளின் வீர வரலாற்றை எடுத்துரைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்திய நீதிமன்றங்களில் பெண்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் இல்லை என்று கூறியதை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

தொடர்ந்து மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் வரவேற்புரையில் ஜாதி ஒழிப்பு போராளிகளின் சிறப்புகளை எல்லாம் எடுத்துரைத்து சிறை சென்று உயிர்நீத்த போராளி களுக்கு இரண்டு நிமிடம் அமைதி காத்து நினைவைப் போற்றுவோம் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் இரண்டு நிமிடம் அமைதி காத்து போராளிகளின் நினைவை போற்றினர். ஜாதி ஒழிப்பு போராளிகளின் உயிர் தியாகத் தால்தான் நாம் இன்று சுயமரி யாதையுடன் வாழ்கிறோம் என்று பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

கொள்கைப் பாடங்கள்

தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தந்தை பெரியார் பற்றாளர் தோழர் சாரையா மற்றும் அவர்தம் குழுவினர் தெலுங்கு மொழியில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, தத்துவங்களை மிக உச்ச குரலில் உணர்ச்சிப் பூர்வமாக ஆடிப் பாடி மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களின் நிகழ்ச்சி அமைந்தது. பாடிய தெலுங்கு பாடல் களின் தமிழ் மொழி பெயர்ப்பை ஆர்.டி.வீரபத்திரன் வழங்கி னார்.

தொடர்ந்து கழக பேச்சாளரும் பெரியார் வாசகர் வட்ட தலைவருமான வழக்குரைஞர் வீரமர்த்தினி உரையாற்று வதற்கு முன் கு.திவ்யா பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். 

வீரமர்த்தினி தனது உரையின்போது, ஜாதி ஒழிப்பு போராளிகளின் வரலாற்றை மிகவும் நேர்த்தியாக விளக்கி உரையாற்றியது மிக சிறப்பு,தந்தை பெரியார் அவர்களின் உழைப்பு,பெரியார் சிறைக்கு அஞ்சாமல் தன் கருத்தை பதிவு செய்து அரசின் தடைகளை மீறி போராட்டம்,ஆர்ப்பாட்டம், மறியல் செய்து சிறை  சென்றது,இந்திய அரசு தந்தை பெரியார் அவர்களின் கோரிக்கையை காலம் கடந்து நிறைவேற்றியது, தந்தை பெரியார் அவர்களின் தன்னலம் கருதாத மக்கள் பணி - இனமானம் காக்க தன்மானம் இழந்தாலும் கவலைப் படாத பாங்கு, தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் வழங்கிய தந்தை பெரியார் அவர்களின் நீண்ட வரலாற்றுப் பதிவுகளை மக்கள் மத்தியில் பதிவு செய்தது மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. மிக அருமையான தகவல் பதிவாக அமைந்தது வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களின் 50 நிமிட உரை மிக சிறப்பாக அமைந்தது.

மகளிர் தோழர்கள்

தொடர்ந்து பேச்சாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்ற வருகை தருவதற்கு முன் கழகத்தின் ஆண் பொறுப்பாளர்கள் அனைவரும் மேடையில் இருந்து விலகி முழுவதும் மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் தோழர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர், முறையே வழக்குரைஞர் வீரமர்த்தினி, தலைமை பொதுக்குழு உறுப் பினர் ஊரப்பாக்கம் பொ.சுமதி, கரசங்கால் மோ.மீனாம்பாள், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மண்ணி வாக்கம் அருணா, பெருங்களத்தூர் இரா.சு.உத்ரா, கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் விஜயா, மாணவர் கழக மாநில பொறுப் பாளர் தொண்டறம் மாணாக்கன், தாம்பரம் கு.திவ்யா, சோமங் கலம் பா.அபினா சுருதி மற்றும் ஆந்திர மாநில மகளிர் தோழர் சன்யாசம்மா ஆகிய 10 மகளிர் தோழர்களை அமர வைத்து மாவட்ட கழகம் கூட்டம் நடத்தியதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பிரமித்தனர். பிறகு வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார். 

ஜாதி ஒழிப்புப் போராளிகள்

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஜாதி ஒழிப்பு போராளி களின் வீர வரலாற்றை மிக துல்லியமாக எடுத்துரைத்து பொது மக்கள் சிந்திக்கும் வகையில் மிக நேர்த்தியாக ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கான வீர வணக்க நாள் செய்திகளை ஏராள மாக எடுத்துக் கூறினார். 

தமிழ்நாடு என்றும் திராவிட மக்களின் குறிப்பாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே பாடுபட்ட ஓர் மாநிலம். நம்முடைய திராவிட தலைவர்கள் மக்களுக்காகவே பாடுப் பட்டார்கள். அந்த வகையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், அன்னை மணியம் மையார், ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்கள் மற்றும் எண்ணற்ற தலைவர்கள் தன்மானம் கருதாமல் தமிழ்நாட்டின் உரிமை களை வென்றெடுக்க எண்ணிலடங்கா சிறைவாசம் அனு பவித்து மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க தங்களு டைய வாழ்வையே வழங்கியுள்ளார்கள். இப்படிப் பட்ட தலைவர்களின் வழியை பின்பற்றி நாமும் இந்த சமூகத்திற்கு பாடுபட வேண்டும்.

திராவிட இயக்க ஆட்சிகளில்...

இந்த 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிகளில் சாதித்தது என்ன என்று கேட்பவர்களுக்கு இருக்கிறது ஏராளம்,ஏராளம் அப்படிப்பட்ட திராவிட இயக்க ஆட்சிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ் கிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பல நாடுகளுக்கு சமமாக திகழ்கிறது என்பது திண்ணம். குறிப்பாக சீன நாட்டின் வளர்ச்சி எவ்வளவோ அந்த அளவுக்கு தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மாநில ஆட்சியாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களை எல்லாம் அழைத்து வந்து இம்மாநிலத்தில் தொழில் தொடங்கி படித்த மாணவர்களுக்கு, இளைஞர் களுக்கு வேலைவாய்பை வாங்கிக் கொடுத்து பொருளாதார சிக்கல் இல்லாமல் அமைத்துக் கொடுத்தது திராவிட ஆட்சி கள் - ஆகவே திராவிடத்தால் வீழவில்லை திரா விடத்தால் எழுந்தோம், வளர்ச்சியடைந்தோம்,முன்னேற்றம் அடைந் தோம், வாழ்கிறோம் வாழ்வோம்.

மக்கள் தியாக வாழ்வுக்கு...

ஆகவே மக்கள் தியாக வாழ்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு இப்படிப்பட்ட வாழ்வு தான் சிறப்பான வாழ்வாக அமையும். மக்களுக்கான இந்த தியாக வாழ்வு தான் நாம் இன்று வீர வணக்கம் மற்றும் மரியாதை செலுத்திய ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு நாம் செய்யும் சுயமரியா தையுடன் கூடிய வீர வணக்கமாக இருக்கும் ஆகவே மக்களே உங்கள் பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று வேலைவாய்பை ஏற்படுத்திக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ வேண்டுமா?

இந்த சமூகத்தை நல்ல சமூகமாக வாழ வைக்க வேண்டுமானால் அது திராவிட மாடல்.

உங்கள் பிள்ளைகள் இந்த சமூகத்திற்கு கேடு விளை விக்கும் செயல்களான ரவுடியாகவும், கேடியாகவும், கலவரம் செய்யக் கூடியவனாகவும், திருடனாகவும், சமூகத்தில் அனைத்துக் கேடுகளையும் விளைக்க கூடியவனாக இருக்க வேண்டுமா? அது தான் ஆரியம்,பார்ப்பனியம்,

ஹிந்துத்துவா, பாரதிய ஜனதா கட்சியின் மாடல் - ஆகவே மக்களே மிக ஜாக்கிரதையாக இருங்கள் - பாசாங்கு, பசப்பு, ஏமாற்று பேர்வழிகளிடம்  என்று மிக உணர்ச்சி பூர்வமாக உரை ஆற்றினார்.  

சிறப்பித்த தோழர்கள்

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த கழகத் தோழர்கள் -

பொழிசை.க.கண்ணன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் ந.கரிகாலன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், கூடுவாஞ்சேரி மா.இராசு, க.ராஜேந் திரன், சோமங்கலம் அ.பாலமுரளி, அ.புருசோத்தம், தாம்பரம் சீ.லட்சுமிபதி, மு.மணிமாறன், மா.குணசேகரன், மெடிக்கல் எஸ்.ஆர்.வெங்கடேஷ், வெ.இன்பதமிழ் பாரதி, சத்யா, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் த.முத்துகுமார்,நா.மணிகண்டன், ஊரப்பாக்கம் இரா.உத்திரகுமாரன், பி.சீனி வாசன்,அரங்க.பொய்யாமொழி,சே.சரவணன், கூடுவாஞ்சேரி மு.தினேஷ்குமார், மு.இராஜேஷ்,துரை.சேகரன், ஆட்டோ சி.கோபி,பெனடிக்ட், ரெ.கதிர்வேல்,சி.சட்டநாதன், அ.கருப் பையா,முடிச்சூர் வருன் முகிலன் வே.மணிகண்டன், செம் பாக்கம் கு.வைதியலிங்கம்,குழ.செல்வராஜ், எம்.இராஜாங் கம்,எம்.இராஜி, குன்றத்தூர் மு.திருமலை,வீரவேல், ஆ.விஜய்,பம்மல் என்.கோபி, வை.பார்த்திபன்,இராமாபுரம் ச.சனார்த்தனம், அரும்பாக்கம் சா.தாமோதரன், இரவிசந்திரன், நெ.பாபு ஜனார்த்தனம், பூவிருந்தவல்லி, க தமிழ்ச்செல்வன், க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, சீர்காழி.கு.நா.இராமண்ணா, எம்.சீனிவாசன், குரோம்பேட்டை அ.மதி வாணன், அ.இராசேந்திரன், கரைமா நகர் தே.சுரேஷ், மதுரவாயல் தங்க.சரவணன், சி.காமாட்சி, சு.லெனின்,இ.வாமணன்,பாசு.காளிமுத்து,படப்பை சே.சந்திரசேகரன், சாம்ப சிவம்,ஆந்திர மாநில தோழர் சாரையா குழுத் தோழர்கள் அப்பாராவ்,எஸ்.வி.இரமேஷ், யூ.எஸ்.சிவாராவ், டி.பிரவீன் குமார் மற்றும் பெரியார் பிஞ்சு ம.வியன் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தாம்பரம் மாநகராட்சி 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் யாக்கூப் தோழர்கள் புடைசூழ வருகை தந்து பேச்சாளர் களுக்கு  பயனாடை அணிவித்து மகிழ்ந்தார்.

திராவிட இயக்க தமிழர் பேரவையின் கூடுவாஞ்சேரி செயல்பாட்டாளர் த.முத்துகுமார் பேச்சாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அதே போன்று மாணவர் கழகத் தோழர் வெ.இன்பதமிழ் பாரதி பேச்சாளர்களுக்கு நூல்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

கூட்ட முடிவில் பொதுக்குழு உறுப்பினர் பொ.சுமதி நன்றியுரை ஆற்றினார். பொதுக்கூட்டம் மக்களின் பேராதரவுடன் மிக சிறப்பாக நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment