செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

செய்திச் சுருக்கம்

நிபந்தனை

மாநிலங்கள் கடன் வாங்குவதற்கு புதிய நிபந்தனையை ஒன்றிய அரசு விதித்துள்ளது. இதன்படி, அடுத்த நிதியாண் டில் மாநிலங்கள் மின்துறை சீரமைப்புகளை மேற்கொண் டால் மட்டுமே, மாநில ஜிடிபியில் 3.5 சதவீதம் கடன் வாங்க முடியும். இல்லாவிட்டால் 3 சதவீதம் மட்டும் கடன் பெற முடியும் என ஒன்றிய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

கூடுகிறது

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை அடுத்த மாதம் பொங்கல் விழாவிற்கு முன் கூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

உயர்வு

தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், ஆவின் நெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒப்புதல்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.4,194.66 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

அரசாணை

தமிழ்நாட்டில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உத்தரவு

தமிழ்நாட்டில் பள்ளி செல்லா குழந்தைகளின் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் உத்தரவு.

கேளிக்கை

தமிழ்நாட்டில் கட்டட விதிமுறைகளை காலத்துக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு மாற்றி அமைக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவை முதலமைச்சரிடம் கோரிக்கை!

பாராட்டு

போக்சோ வழக்குகள் மற்றும் சிறார் சம்பந்தப்பட்ட குற்றங்களில் முறையான விசாரணைக்கு பின்பே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தென் மண்டல அய்.ஜி. அஸ்ரா கார்க் முறையாக அமல்படுத்து வதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு!

கணக்கெடுப்பு

ஓலை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் வீட்டில் வசிப்பவர்கள், தகுதியற்ற வீட்டில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தர தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கிராமப்புறங்களில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியுள்ளனர்.

உறுதி

வாக்காளர் அட்டையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் நீக்கப்படாது என மக்கள வையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்.


No comments:

Post a Comment