தாமிரபரணி பெயரை ‘பொருநை நதி’ என மாற்றக் கோரி வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 4, 2022

தாமிரபரணி பெயரை ‘பொருநை நதி’ என மாற்றக் கோரி வழக்கு

மதுரை, டிச.4 தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மொழியியல் அறிஞர்களிடம் கருத்துக் கேட்டு தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. தாமிரபரணி வற்றாத ஜீவ நதியாகும். தாமிரபரணி என்பது வடமொழிச் சொல். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும். திருவிளையாடல் புரா ணம், மங்கல நிகண்டு, முக்கூடற் பள்ளு, பெரிய புராணம் என பல தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி பொருநை நதி என்றே அழைக்கப்படு கிறது. இதனை பல்வேறு அகழ் வாராய்ச்சியாளர்கள், தமிழறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி.1011 ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. இதனால் தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகா தேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் பினே காஸ் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கு முக்கிய வழக்காகும். அரசு மொழியியல் நிபுணர்களிடம் கருத்து கேட்டு, உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்


No comments:

Post a Comment