குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிவு இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் தேர்தல் முடிவு இமாச்சலில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்

புதுடில்லி, டிச. 8- குஜராத், இமாச்சல பிரதேச சட் டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

குஜராத் சட்டப் பேரவை தேர்தலில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கிறது. 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 38 தொகுதி களில் காங்கிரஸ் முன்னி லையில் உள்ள நிலையில் 27 தொகுதிகளில் முன் னிலை பெற்று பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. 

இமாச்சலப் பிரதேசத் தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

கோவா, மத்திய பிர தேசத்தில் செய்தது போல காங். எம்.எல்.ஏ. க்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைக் கலாம். பாஜகவின் குதிரை பேரத்தை தடுக்க வெற்றி வேட்பாளர்களை காங்கி ரஸ் தலைமை பாதுகாப் பான இடத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறப் படுகிறது.

இடைத்தேர்தல்

உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைகளுக் கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெற்றது. இவை அனைத்திலும் பாஜக பின்தங்கியுள்ளது.

பீகாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பனுப்ரதாப் பூர், ஒடிசாவின் பாதம்பூர், ராஜஸ்தானின் சர்தார் சாகர் ஆகிய சட்டப்பேர வைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது. 

உத்தரப் பிரதே சத்தில் ராம்பூர் சதார், கத் துவாலி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக் கும், மெயின்புரி நாடாளு மன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடை பெற்றது. இவற்றில் பதி வான வாக்குகளை எண் ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. 

இவை அனைத்திலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பின்தங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment