அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

அட, அண்டப் புளுகு - அவுட்டுத் திரி ‘தினமலரே!'

நேற்றைய (7.12.2022) ‘தினமலர்' 8 ஆம் பக்கத்தில் ‘இது உங்கள் இடம்' பகுதியில் ‘‘வீரமணிக்காக பேசிய ஸ்டாலின்'' என்ற தலைப்பில், யாரோ ஒரு ‘அனாமதேயம்' எழுதியுள்ளது. (‘தினமலரே'கூட எழுதி ஒருவர் பெயரில் வெளியிட்டிருக்கலாம்).

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் (2.12.2022, சென்னை கலை வாணர் அரங்கம்) மு.க.ஸ்டாலின்- ‘மிசா' கைதியாக சென்னை மத்திய சிறையில் தன்மீது விழுந்த அடியை சிட்டிபாபுதான் தாங்கிக் கொண்டார் என்று இதுவரை சொல்லி வந்த மு.க.ஸ்டாலின், இந்த விழா வில் வீரமணிதான் தாங்கிக் கொண்டார் என்று சொன்னதாகக் கரடி விட்டுள்ளது.

முதலமைச்சர் பேச்சு ‘விடு தலை'யிலும் (3.12.2022) வெளி வந்துள்ளது - முரசொலியிலும் வெளிவந்துள்ளது.

‘‘நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட நேரத் தில், நான் கைது செய்யப் பட்டு சிறைக்குச் செல் கிறேன். அதுதான் என் னுடைய முதல் சிறை அனுபவம், அப்போது எனக்கு 23 வயது. எனக்கு முன்னால், ஆசிரியர் அவர் களும் மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறை யில் இருக்கிறார்கள், கொட் டடியுள் அடைக்கப்பட்டிருக் கிறார்கள். நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட  அன்று, அங்கிருக்கக்கூடிய காவலர்களால் குண்டாந்தடியால் பலமாகத் தாக்கப் படுகிறேன். அப்போது என்மீது விழுந்த பெரும்பாலான அடிகளை, தன் உடம்பிலே தாங்கியவர் மறைந்த அண்ணன் சிட்டிபாபு அவர்கள். சிட்டிபாபு அவர்கள் மட்டுமல்ல, அண்ணன் ஆசிரியர் அவர்களும்தான், இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவாக இருந்தவன் நான்- அடி தாங்க உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என் பதை அறியாத நிலையில் இருந்தவன் நான். 

அப்போது என் மீது விழுந்த அடியை தாங்கி, அதன் பிறகு மன தைரியத்தை கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன்னுயிரையும் காத்து என்னுயிரையும் காத்த கருப்புச் சட் டைக்காரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.''

இதுதான் முதலமைச்சர் பேசியது.

உண்மை இவ்வாறு இருக்க, திரு.சிட்டி பாபுவை மறைத்து ஆசிரியரை மட்டும் முதன்மைப் படுத்திச் சொன் னதாகவும் ‘அவுட் டுத்திரி' ‘தினமலர்' அண்டப் புளுகாக அவிழ்த்துக் கொட்டுவானேன்?

ஏதோ இப்பொழுதுதான் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படிப் பேசியதாகச் சொல்லுகிறது. ஆசிரியர் வீரமணி அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியிலும் (2.12.2007) இந்தத் தகவலைச் சொன் னதுண்டே!

ஸ்டாலின் கூறியதை வீரமணி வழிமொழிந்து சொல்லவில்லையாம்.

ஆசிரியர் என்ன பேசவேண்டும், மு.க.ஸ்டாலின் என்ன பேசவேண்டும், எப்படியெல்லாம் வழிமொழிய வேண்டும் என்பதைத் ‘திரிநூலான தினமலரைக்' கேட்டுதான் நடந்து கொள்ளவேண்டுமோ?

மு.க.ஸ்டாலின் ‘மிசா'வில் சிறைக்கே போகவில்லை என்று சொல்லும் அண்ணாமலைகளைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு ‘அரோகரா' போடும் கூட்டமாச்சே! எதைத்தான் எழுதாது!

‘தினமலரில்' வெளிவரும் கடிதத்தைப் பெயர் மாற்றி ‘காலைக்கதிரில்' அட்சரம் பிறழாமல் எழுதும் தகிடுதத்த ‘தினமலர்' களுக்கு மானமாவது, மண்ணாங்கட்டி யாவது!

No comments:

Post a Comment