திருச்சி, டிச. 22- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறையில் இணைப் பேராசிரியராக பணிபுரியும் முனைவர் இரா. இராஜகோபாலன் தேசிய மற்றும் பன்னாட்டளவில் கடந்த 6 மாதங் களில் ஜூன் முதல் டிசம்பர் 2022 வரை நடைபெற்ற கருத்தரங்குகளில் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டு ரைகளை பல்வேறு மருந்தியல் கல் லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சமர்பித்துள்ளார்.
1. அல் அமீன் கல்லூரி, பெங் களூரு, கருநாடகா
2. பாரத் பல்கலைக்கழகம், சென்னை, தமிழ் நாடு
3. விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகம், சேலம், தமிழ் நாடு
4. கலிங்கா பல்கலைக்கழகம், சத்தீஸ்கர்
5. அடமாஸ் பல்கலைக்கழகம், கொல்கத்தா மற்றும் AYUSH, இந்திய அரசு
பங்கு பெற்ற அனைத்து கருத் தரங்குகளிலும் முதல் பரிசினையும் சான்றிதழையும் பெற்று கல்லூ ரிக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்லூரி நிர்வாகத்தினர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அவரின் ஆராய்ச்சிப் பணியினைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment