மக்களின் மனதிலே பெரியார் - என்றும்
வலம்வர வழிவகை கண்டு
குக்கலைப் போல்கவே பொருளின்றி - நாளும்
குரைப்பவர் வாலையும் நறுக்கி
சிக்கல்க ளனைத்தும் அறமன்றில் - நல்ல
தீர்வாலே நயன்மை பெற்று
மக்கேதும் வைத்துப் பேசிடாத - 'வீர
மணி'யார் வாழ்கென வாழ்த்துவனே!
அறைகூவல் விடுக்கின்ற அறிக்கை - அதுவும்
அயராது தீட்டுகின்ற தன்மை
சிறையேக மறுக்காத நெஞ்சம் - தொய்வு
சிறிதேனும் இல்லாத உணர்வு
மறைபொருள் விளக்குகிற ஆற்றல் - வழக்கில்
'மானமிகு' வழங்கிட்ட அண்ணல்
நிறைகுடம்போல் ததும்பாத அடக்கம் - தமிழர்
தலைவராம் 'வீரமணி' வாழியவே!
நெஞ்சினில் தூய்மையைத் தேக்கி - அறிவுத்
தெளிவினால் நாடொறும் பயிற்றி
வஞ்சம்என் பதுஅறியா சிந்தை - அது
வழங்குகிற எண்ணமும் விதைத்து
துஞ்சுவது ஒழிந்துமே பரப்புரை - செய்து
விஞ்சுநற் றழிழாலே விரிக்கும் - ஆசிரியர்
'வீரமணி' நூறாண்டு வாழியவே!
No comments:
Post a Comment