திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 5, 2022

திராவிடர் கழகம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு தமிழ்நாடெங்கும் நடைபெற்ற வீர வணக்கப் பொதுக்கூட்டங்கள்


கல்லக்குறிச்சி

25.11.2022 அன்று மாலை 5.30 மணிக்கு, கல்லக்குறிச்சி மந்தை வெளி, சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை நினைவுத் திடலில், ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ச.சுந்தரராசன் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மண்டல கழகத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தொடக்க உரை யாற்றினார்.

மாநில திராவிடர் கழக மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் திருக்கோவிலூர் பாலன், எடுத்தவாய்நத்தம் த.பெரியசாமி, விழுப்புரம் மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் திராவிட புகழ், மாவட்ட கழக இலக்கிய அணித் தலைவர் பெ.சயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், செயலாளர் வீ.முருகேசன், அமைப்பாளர் சீ.முருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.புகழேந்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.கரிகாலன், மாவட்ட கழக துணைச் செயலாளர் பா.முத்து, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கே.முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ரிசிவந்தியம் கழகத் தலைவர் அர.சண்முகம், வடகரைத் தாழனூர் கிளைக் கழகத் தலைவர் மு.சேகர், சங்கராபுரம் ஒன்றிய கழகத் தலைவர் பெ.பாலசண்முகம், ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை உதவியாளர் சிவமாலை, வானவரெட்டி திராவிட மாணவர் கழகத் தோழர் தனவேல் ஆகிய கழகத் தோழர்களும், கல்லக்குறிச்சி திருக்குறள் நடுவம் நிறுவனர் மோகன், தமிழ்வழிக் கல்வி இயக்கம், தலைவர் அ.சி.சின்னப்ப தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் த.ம.ஜெய்சங்கர், சிபிஎம் மாநில துணைத் தலைவர் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி) கோ.ஆனந்தன், த.மு.மு. கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.டி.இஸ்மாயில், அய்.பி.பி. கட்சியின் மாவட்டச் செயலாளர் அப்துல்காதர் நூரி, ம.தி.மு.க. கட்சியின் நகரச் செயலாளர் வி.எஸ்.வேலு ஆகிய தோழமைக் கட்சி நிர்வாகிகளும் உரையாற்றினார்கள்.

மாநில திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்புக்கு சிறையேகிய வீரர்களை பட்டியல்படுத்தி, கொடுமைகளை அனுபவித்து உயிர்த் தியாகம் மாவீரர்களைப் பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். 

செயலவைத் தலைவர் சிறப்புரை

நிறைவுரையாகவும், சிறப்புரையாகவும் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார். அவர் தமது உரையில்: "1925ஆம் ஆண்டில் தந்தை பெரியாரால் ஜாதி ஒழிக்கப்பட்டு சமத்துவம் ஏற்பட்டு, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத் திற்காக சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார். அதே ஆண்டில் ஜாதியை நிலைநிறுத்தி, சனாதன தர்மம் காக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஹெட் கேவார் என்ற இந்து சனாதனவாதியால் தோற்றுவிக்கப்பட்டது.

ஜாதியின் காரணமாக, கல்வி மறுக்கப்பட்ட, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட நம் சூத்திரர்களுக்கு சென்னையில் தங்கிப் படிக்க திராவிட மாணவர் இல்லத்தை நீதிக்கட்சியின் மும்மூர்த்திகள் சர்பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாகவே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாண வர்கள் படித்து முன்னேற வாய்ப்பு ஏற்பட்டது. நீதிக்கட்சி முதலமைச்சராக இருந்த பி.சுப்பராயன் ஆட்சிக் காலத்தில் தான் வகுப்புவாரி பிரதிநித்துவ முறையில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது ஆட்சிக் காலத்தில்தான் உள்ளாட்சித் துறை அமைச்சராகயிருந்த முத்தையா முதலியார் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஏற்படுத்தினார். இப்பல்கலைக்கழகம் சூத்திரர்கள் படிக்க வேண்டுமென்பதற்காகவே விளங்கியது என்று சொல்லலாம். இப்பல்கலைக் கழகத்தில்தான் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன் உள்ளிட்ட பலர் படித்தார்கள்.

நாடு விடுதலை பெற்றபின் அரசமைப்புச் சட்டம் இயற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் 6 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் நால்வர் பார்ப்பனர்கள். ஒருவர் இசுலாமியர், ஒருவர் மட்டுமே சூத்திரர். அம்பேத்கர் சட்ட வரைவுக் குழு தலைவராக இருந்தபோதிலும் அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சட்ட வரைவுக் குழு பார்ப்பன உறுப்பினர்கள் நால்வர் மற்றும் இந்நால்வருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இசுலாமியர் ஆகிய அய்வரின் நிர்பந்தங்களுக்கு கட்டுப் பட்டே அம்பேத்கர் சட்டம் இயற்றினார். இந்த அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிரிதியை ஆதாரமாகக் கொண்டு ஜாதியை நிலைநிறுத்தும் வகையில் இயற்றப்பட்டது. இச்சட்ட வரைவு 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது.

உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலுமில்லாத, பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நாடு இந்தியா மட்டுமே. இந்த பிறப்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஜாதியினால் நாம் சூத்திரர்களாக - இழி ஜாதி மக்களாக இன்று வரையும் இருந்து வருகிறோம். 

ஆனால் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்று பெரியார் போராடினார். அவர் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஜாதியை ஒழித்து சமத்துவம் ஏற்பட போராடி வருகிறார். அவரின் தலைமையில் பல இலட்சக்கணக்கான தொண்டர்கள் ஜாதி ஒழிப்புக்காகப் போராடுகிறோம். இனியும் போராடுவாம். வெற்றி பெறும்வரை போராடிக் கொண்டே இருப்போம். வாழ்க பெரியார்! வெல்க பகுத்தறிவு!" என்று பேசி முடித்தார்.

இக்கூட்டத்தில் கல்லக்குறிச்சி ஒன்றியத் தலைவர் பெரியார் நேசன், சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் கே.மதி யழகன், கல்லக்குறிச்சி ப.க. தலைவர் கி.அண்ணாதுரை, மாத்தூர் கிளைக் கழகத் தலைவர் அ.ச.துரைராஜ், கல்லக் குறிச்சி நகர செயலாளர் நா.பெரியார், அரசு போக்குவரத்து பெரியார் செல்வன், இராசவேலன், மாயக்கண்ணன், ப.தமிழ்ச் செல்வி, இராமன், சங்கராபுரம் வட்ட மாணவர் கழகத் தலைவர் மா.ஏழுமலை திராவிட மாணவர் கழகத் தோழர்கள் மணியமுதன், பிரகாஷ், அஜீத், சஞ்சீவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியில் கல்லை. நகரத் தலைவர் இரா.முத்துசாமி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

இராமேஸ்வரம்

பேருந்து நிலையத்தில் நடந்த கூட்டத்தில் சிவகங்கை மண்டல  தலைவர் கே.எம்.சிகாமணி தலைமை தாங்கினார் கழக பேச்சாளர்கள் மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி, காரைக்குடி முனைவர்  பேராசிரியர் மு.சு. கண்மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த் தினார்கள் நிகழ்ச்சியில் இராமேஸ்வரம் நகராட்சி தலைவர் கே.இ.நாசர் தான், மற்றும் நகராட்சி மேனாள் தலைவர் வி.ஏ.அர்ச்சுனன், மாவட்ட தலைவர் மு.முருகேசன், மாவட்ட செயலாளர் கோ.வ. அண்ணா ரவி, சிபிஅய் மாவட்ட குழு உறுப்பினர் சே.முருகானந்தம், சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர் ஜஸ்டின், விடுதலை சிறுத்தை கட்சி நகர் தலைவர் நாகராஜ் , திமுக செயற்குழு உறுப்பினர் சேசு மிக்கேல், அமமுக அவைத்தலைவர் பன்னீர் செல்வம், மற்றும் திரளான திராவிடர் கழகம், திமுக, சிபிஅய், சிபிஎம்  தோழர்கள் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்

நவம்பர் 27 ஆம் நாள் விருத்தாசலம் பாலக்கரை திலீபன் சதுக்கத்தில், ஜாதி ஒழிப்பு போராளி சுயமரியாதைச் சுடரொளி சபாபதி நினைவு மேடை யில் எழுச்சியுடனும், உணர்ச்சிமிக்க வகையிலும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங் கோவன்தொடக்க உரையாற்றினார். மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் நா.தாமோ தரன், மாவட்ட அமைப்பாளர் வை.இளவரசன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.இராசமாணிக்கம், விருத்தாசலம் நகர செய லாளர் த.சேகர், கம்மாபுரம் ஒன்றியத் தலைவர் பாவேந்தர் விரும்பி, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் த.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார்மணி, மாவட்ட மாணவர் கழக தலைவர் செ.இராமராஜ், பெண்ணாடம் நகர செயலாளர் செ.கா.இராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ஆ.செந்தில், அறிவழகன், ஆனஸ்ட்ராஜ், சபரி, இளங்கனிஆகியோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையேற்றார். வேப்பூர் வட்டார செயலாளர் அ.பன்னீர் செல்வம் வரவேற்புரையாற்ற, மாவட்டச் செயலாளர் 

ப.வெற்றிச்செல்வன் இணைப்புரை வழங்க, நிறைவாக விருத் தாசலம் ஒன்றியத் தலைவர் க.பாலமுருகன் நன்றி கூறினார்.

மேட்டூர் - எடப்பாடி

மேட்டூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் எடப்பாடியில் 30-11-2022 அன்று நடைபெற்றது.கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன்  சிறப்புரையாற்றினார். 

சிந்தாமணியூர் சி சுப்ரமணியன், க.கிருட்டினமூர்த்தி, எடப்பாடி க.நா பாலு, சண்முகசுந்தரம், ரவி, கோ.வி.அன்புமதி, ஆ.சத்தியநாதன், மேட்டூர் குமார், ஓமலூர் பெ.சவுந்தரராசன், வெள்ளாளர் அ.ப.இராசேந்திரன், மாணவர் கபிலன், வாத் தியம் பட்டி முத்து, காளிப்பட்டி அண்ணாதுரை உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பழனி

பழனி கழக மாவட்டம் சார்பில் ஜாதி ஒழிப்புப் போராளி களுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பழனி-நெய்க்கார பட்டி "சுயமரியாதைச் சுடரொளி" நா.நல்லதம்பி நினைவுத் திடலில் 30-11-2022 அன்று மாலை 6-30 மணியளவில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் மா.முருகன் தலைமையேற்றார்.  

மேலும் கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் மாவட்ட ப.க தலைவர் ச.திராவிடச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் புலவர் வீர.கலாநிதி, அ.திருச் செல்வம், சி.கருப்புச்சாமி, வேலூர் கணேசன், பெரியார் பத்மநாபன், அமலசுந்தரி,  கவிச்சுடர் கு.கிருட்டிணா, பால் ஜாக்சன், கவுதம், ச.பாலசுப்பிரமணி, கருப்புச்சாமி, குண. அறிவழகன், அருண், தமிழ்முத்து (தி.த.பே), அன்பழகன் (வி.சி.க), சந்திரன், சி.இராதாகிருட்டிணன் தோழர்கள் உள் ளிட்ட 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியாக வேலூர் மதனபூபதி நன்றி கூறினார்.

திருநள்ளாறு

ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் 29/11/2022 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் காரைக்கால் மண்டல கழகத்தின் சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.

1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசமைப்பு சட்டத்தில் ஜாதியை பாதுகாக்கும் சட்ட பிரிவுகளை கொளுத்திய திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு மாவீரர்களுக்கு வீரவணக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி திருநள்ளாறு கடை வீதியில் மாலையில் நடைபெற்றது.

காரைக்கால் மண்டல திராவிடர் கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் நா.அன்பானந்தன், காரைக்கால் மண்டல துணை செயலாளர் செ.செந்தமிழன், மண்டல இளைஞரணி தலைவர் மு.பி.பெரியார் கணபதி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் காரைக்கால் மண்டல திராவிடர் கழக செயலாளர் பொன். பன்னீர்செல்வம் வரவேற்றார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்.

சிபிஅய் மாவட்ட செயலாளர் பி. மதியழகன், சிபிஅய்எம் மாவட்ட பொறுப்பாளர் வின்சென்ட், திமுக மாநில மாணவர் அணி அமைப்பாளர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

No comments:

Post a Comment