புதுடில்லி டிச. 4- வருகிற 7ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்த குளிர்கால கூட் டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் நேற்று (3.12.2022) காலை உயர்மட்டக்கூட்டம் ஒன்றைக்கூட்டினார்.
கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை காங்கி ரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ், மக்க ளவை காங்கிரஸ் தலைமை கொறடா கே.சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் உத்திகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் நாட்டின் தற் போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது.
இதையொட்டி ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது:- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 முக்கிய பிரச்சினைகளை எழுப்புவோம். இந்திய-சீன எல்லைப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, நாட்டின் அரசமைப்புச் சட்டப்படியான நிறுவ னங்களின் செயல்பாடு களில் தலையிடுதல் ஆகிய பிரச்சினைகளை எழுப்புவோம். ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங் கிரஸ் சாதகமாக உள் ளது. இதைச் செய்து முடிக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக் கான இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக 3 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
ஆனால் 2 நீதிபதிகள் இட ஒதுக்கீடக்கு எதி ராக கேள்விகள் எழுப்பி னர். இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக மறுபரி சீலனை செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண் டும் என வலியுறுத்து வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment