நாடாளுமன்ற செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

நாடாளுமன்ற செய்திகள்

இந்திய குடியுரிமையை  16 லட்சம் பேர் துறந்தனர் ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, டிச.13 கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மக்கள வையில் கூறியது. நடப்பாண்டில் அக்டோபர் 31 வரையிலான நிலவரப்படி 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2015-இல் 1,31,489 ஆகவும், 2017-இல் 1,33,049-ஆகவும் 2018-இல் 1,34,561-ஆகவும், 2019-இல் 1,44,017-ஆகவும்இருந்தன. கடந்த 2021-இல் மட்டும்1,63,370 பேர் இந்திய குடியுரி மையை விட்டு விலகியுள்ளனர்.

அதன்அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் மொத்தம் 16,21,561 பேர் இந்திய குடியுரிமையை விலக்கிக் கொண்டு வெளிநாடுகளில் குடி யேறியுள்ளனர்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் தவிர்த்த இதர வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2015-இல் 93 பேருக்கும், 2016-ல் 153 பேருக்கும், 2017-இல்175 பேருக்கும், 2018-இல் 129 பேருக்கும், 2019-இல் 113 பேருக்கும், 2020-இல் 27 பேருக்கும், 2021-இல் 42 பேருக்கும், 2022-இல் 60 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப் பட்டது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


19 மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்  

புதுடில்லி, டிச. 13 தமிழ்நாடு உள்பட 

19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக ஒன்றிய சட்ட அமைச்சர் தெரிவித்தார். 

 நாடாளுமன்றத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டசபை களில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது குறித்தும் மக்களவையில் திரிணா முல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அபிஷேக் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'பீகார், சத்தீஷ் கார், அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் அதிக மான பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 

அதேவேளையில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 19 மாநில சட்டசபைகளில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் சட்டமன்ற உறுப் பினர்களே இருக்கின்றனர்.

சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற குஜ ராத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை 8.2 சதவீதமாக உள்ளது. அதே நேரம் இமாசலபிரதேசத்தில் சட்ட சபைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறார். 

நாடு முழுவதுமாக பார்த்தால் சராசரியாக 8 சதவீத பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்தான் இருக்கின்றனர். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை மக்களவையில் 14.94 சதவீத மாகவும், மாநிலங்களவையில் 14.05 சதவீத மாகவும் உள்ளது' என்று கூறினார். நாடாளு மன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோ தாவை கொண்டுவரும் திட்டம் அரசுக்கு உள்ளதா என்றும் அபிஷேக்  கேள்வி எழுப் பினார். 

அதற்கு சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, 

இது தொடர்பான அரசியல்சாசன திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத் தில் கொண்டுவரும் முன், அதுகுறித்த ஒரு மித்த கருத்து ஏற்படும் வகையில் அனைத்து கட்சிகளும் கவனமாக விவாதிக்க வேண்டும்' என்று பதில் கூறினார்.


ரயில்வேயில் மூன்று லட்சம் காலிப் பணியிடங்கள்

புதுதில்லி, டிச.13  ரயில்வே துறையில் 2.98 லட்சத்துக்கும் அதிகமான பணி யிடங்கள் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித் துள்ளார். 

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கேவின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “குரூப் ஏ பிரிவில் 2,201 காலிப் பணியிடங்கள், குரூப்  பி பிரிவில் 858 காலிப் பணியிடங்கள் நிரப்பப்  படாமல் உள்ளன. குரூப் சி பிரிவில் வடக்கு ரயில்வேயில் 38,754 பணியிடங்களும், மேற்கு ரயில்வேயில் 30,476  பணியிடங்களும் நிரப்பப்  படாமல் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. கிழக்கு ரயில்வேயில் 30,141 பணியிடங்க ளும், ஒன்றிய ரயில்வேயில் 28,653 பணியி டங்களும் நிரப்பப்படாமல் உள்ளன எனத் தெரிவித்துள்ளார். ரயில்வேயில் 1991-ஆம் ஆண்டு 16,54,985 பணியாளர்கள் பணியாற்றினர். 2019-ஆம் ஆண்டு 12,48,101 பேர் பணியாற்றினர். 2019-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி  நில வரப்படி ரயில்வேயில் ஏ, பி, சி மற்றும் முந் தைய டி பிரிவுகளில் 2,98,574 காலியிடங்கள் உள்ளன. 2,94,420 பணியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது என்கிறது ஒன்றிய அரசு.


No comments:

Post a Comment