தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 17, 2022

தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை, டிச. 17- தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தற்காலிக மாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரை யாளர்களை தெரிவு செய்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு,

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான  கல்விச் சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், மாண்புமிகு தமிழ்நாடு  முதல மைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில்  தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இக்காலிப்பணியிடங்களுக்கு கவுரவ விரிவுரையாளர் களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங் கள் பல்கலைக் கழக மான்யக் குழு வழிகாட்டு நெறிமுறை களின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணிநாடுநர்களிட மிருந்து பெற்று கவுரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப் படுவர்.  

பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணைய தளத்தில் பதிவிட வசதியாக ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் 15.12.2022 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.  கவுரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள்  29.12.2022 வரை  பதிவு செய்யலாம்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணி நாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகளின் அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இந்த கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment