சென்னை ரிப்பன் கட்டடம் அருகே உள்ள விக்டோரியா அரங்க வாயிலில் நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்டது (1916 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இல்). அந்தப் பிரகடனம் - தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் தொகுக்கப்பட்ட நூலினை,திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடமிருந்து, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெற்றுக்கொண்டார். மேலும் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் மு.நாகநாதன், பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ரா.சரவணன், பேராசிரியர் அ.கருணானந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தமிழர் தலைவர் அவர்கள் இயக்கத்தின் 16 புத்தகங்களை வெளியிட, அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெற்றுக்கொண்டார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் உள்ளனர். (சென்னை, 20.12.2022).
Wednesday, December 21, 2022
நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடனம் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment