ஆம்பூர்,டிச.6- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தேவலாபுரத்தில், திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் கடந்த 1.12.2022 அன்றிரவு 9 மணிக்கு கோயில் அர்ச்சகரான ஜெயபால் (வயது 65) கோயிலை மூடிவிட்டு சென்றார். அடுத்த நாள் (2.12.2022) காலை வந்த போது, கோயில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கோயில் வளாகத்தில் இருந்த இரண்டு உண்டியல்களை சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கோயிலில் இருந்த கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் உண்டியலை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதே போல கோவில் வளாகத்திற்குள், நாகாத்தம்மனுக்கு தனி கோவில் உள்ளது. இங்குள்ள முன்பக்க கதவின் பூட்டை உடைத்தவர்கள், ஒரு உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. உம்மராபாத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment