சென்னை,டிச.23- தமிழ்நாட்டில் 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டா ட வேண்டும் என்ற எண்ணத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சர்க்கரைப் பொங்கல் செய் வதற்கான பொருள்களை நியாயவிலைக் கடைகளில் முதன் முதலில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி யாளர்கள் அதனை பின்பற்றி வழங்கி வந்தனர்.
இத்திட்டத்திற்கு முன்னோடியாக வித் தாக திகழ்ந்தது தி.மு.கழக ஆட்சிதான். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். 2021 ஆம் ஆண்டு தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப்பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு 2022 தைத்திருநாள் - பொங்கல் திருநாள் அன்று நியாயவிலைக் கடைகளில் பொங் கலுக்குத் தேவையான பொருள்கள் மட்டு மின்றி குடும்பத்திற்குத் தேவையான 21 மளிகைப் பொருள்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். அதே போன்று இந்த தைத் திருநாள் பொங்கல் திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மகிழத்தக்க வகையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 1000 மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவலின்படி, "தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடும் வகையில் பரிசுத் தொகை மற்றும் சிறப்புத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு பொங்கல் விழாவை யொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள் ளது. 2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பணத் துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செய லகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடி வின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு 2.1.2023 அன்று சென் னையில் நடைபெறும். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்க உள்ளனர் என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment