மதுரை, டிச 23 ”மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது அவர்களது கண்ணியத் திற்கும், உரிமைக்கும் எதிரானது” எனத் தெரிவித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச்செயலாளர் நாக ராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அம்மனுவில் “கையால் மலம் அள்ள தடை மற்றும் மறு வாழ்வுக்கான சட்டம் 2013இல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதை கண்காணிக்கும் வகையில் மாநிலந்தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வு மேற்கொண்டு இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்ட றிய வேண்டும். மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலான உப கரணங்கள் இல்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப் பதில்லை. விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத் திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதில்லை.
ரயில்வே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பலர் தொடர்ந்து கையால் மலம் அள்ளும் பணியில் தான் ஈடுபட் டுள்ளனர். எனவே, இவர்களை கையால் மலம் அள்ளும் தொழி லாளர்கள் என அறிவிக்க வேண் டும். ஒன்றிய மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப் புணர்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவை யான மறுவாழ்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இதேபோல் இதுதொடர் பாக மேலும் சிலர் மனு செய் திருந்தனர். இந்த மனுக்கள் நீதி பதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு முன்பு வந்தபோது அரசு தரப்பில், “மனி தக் கழிவுகளை அகற்றுவதற்கும், சாக்கடைகளை சுத்தம் செய் வதற்கும் இயந்திரங்கள் பயன் படுத்தப்படுகின்றன” என தெரி விக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் 21.12.2022 அன்று இவ்வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினர். அதில், ”அரசு, மனிதக் கழிவுகளை மனி தனே அகற்றுவதைத் தடுக்க நட வடிக்கைகள் எடுத்து வந்தாலும், தனியார் வீடுகளிலும், சாக் கடைகளிலும் மனிதர்கள் நேரடி யாக இறங்கி சுத்தம் செய்யும் சூழலே நிலவுகிறது. இதை மனு தாரர் தாக்கல் செய்த ஒளிப் படங்கள் உறுதி செய்கின்றன.
மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது அவர்களது கண்ணியத்திற்கும், உரிமைக்கும் எதிரானது. கைகளால் கழிவு களை அகற்றுவது ஒரு குற்றம் என்று அறியாத நிலையே காணப்படுகிறது. மனித கழிவை மனிதனே அகற்றும் முறையை வேரோடு அகற்றிடும் வகையில் கையால் மலம் அள்ளும் வகை யில் பணியில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகர ணங்களை வழங்கப்பட வேண் டும்.
கழிவுநீர் மற்றும் சாக் கடைகளை, இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். மறு வாழ்வு வழங்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது. மனித கழிவை மனிதன் அகற்றுவதில் உள்ள தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார ரீதி யாக அவர்களின் சமூக தரத்தை உயர்த்தும் வகையில் அவர் களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதுவரை இழப்பீடு வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment