காஞ்சிபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

காஞ்சிபுரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம்

காஞ்சிபுரம், டிச. 6- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  ஜாதி ஒழிப்புப் போராட்டத் தில் கலந்து கொண்டு உயிர்நீத்த போராளிக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள தந்தை பெரியார் நினைவுத் தூண் அருகில்  27.11.2022 ஞாயிறு மாலை 6 மணியளவில் நடை பெற்றது.

தோழர் உலகஒளி அவர்களின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் டி.ஏ.ஜி அசோகன் தலைமை தாங்கினார். காஞ்சி மண்டல தலைவர் பு.எல்லப்பன், மாவட்ட இணைச்செயலாளர் அ.வெ. முரளி, மாநகர கழகத் தலைவர் கி.இளையவேள், செயலா ளர் ச.வேலாயுதம், வாலா ஜாபாத் ஒன்றிய அமைப் பாளர் சீத்தாவரம் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வி. கோவிந்தராசு அனை வரையும் வரவேற்றார்.

கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய 'ஆர். எஸ்.எஸ் என்னும் டிரோ ஜன் குதிரை' நூலினை வெளியிட்டு விளக்கவுரை யாற்றினார். திராவிடர் கழக அமைப்புச் செயலா ளர்கள் ஊமை.செயரா மன், பொன்னேரி பன் னீர்செல்வம், மண்டல திராவிடர் கழகத் தலை வர் பு.எல்லப்பன், அ.வெ. முரளி, கி.இளையவேள், ச.வேலாயுதம், ஆ. மோகன், வி.கோவிந்த ராசு, கல்பாக்கம் சேகர், ஓய்வுபெற்ற கிராம நிர் வாக அலுவலர் வாலா ஜாபாத் எஸ்.செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அமைப்புச் செயலா ளர்கள் ஊமை.செயரா மன், பன்னீர்செல்வம், மாவட்ட இணை செய லாளர் அ.வெ. முரளி, காஞ்சி அமுதன், பேசும் கலை வளர்ப்போம் நிறு வனர் மருத்துவர் மு.ஆறுமுகம் ஆகியோர் உரையாற்றினர்.

கழகச் சொற்பொழி வாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். அவர் தம் உரையில், 1957 ஜாதி ஒழிப்பு போராட் டத்தில் கலந்து கொண்டு சிறை புகுந்த, உயிர் நீத்த வீரப்போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி யும், ஆர்.எஸ். எஸ், பி. ஜே.பி மற்றும் சங்கிகளின் முகமூடிகளைக் கிழித் தெரியும் வகையிலும், திராவிடர் இயக்க தலை வர்களின் கொள்கை பிர கடனங்களையும் விளக்கி உரையாற்றினார். 

கூட்டத்தில் ஏராள மான கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மாநகர செயலாளர் ச.வேலாயுதம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment