சென்னை, டிச. 7- பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் நினைவு நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆவது பிறந்த நாளி னையொட்டி பயிலரங்குகள், அரங்க கூட்டங்கள், கருத்தரங் கங்கள் நடத்திட தீர்மானம் நிறைவேறியது.
பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி , பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை, பகுத்தறிவு கலைத்துறை ஆகிய அமைப்பு களின் மாநில பொறுப்பாளர் களின் காணொலி வாயிலான கலந்துரையாடல் கூட்டம் 20.11.2022 மாலை 06.30 மணிக்கு காணொலி வாயிலாக நடை பெற்றது.
கூட்டத்திற்கு பகுத்தறிவா ளர் கழக தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தலைமை ஏற்றார். வருகை புரிந்த அனைவரையும் பொதுச் செயலாளர் வி.மோகன் வரவேற்று பேசியதுடன் கூட் டத்திற்கான நோக்க உரையை வழங்கும்படி தலைவர் அவர் களை கேட்டுக் கொண்டார். தனது தலைமை உரையின் முன்னுரையில் பகுத்தறிவாளர் கழக அமைப்புகளின் பொறுப் பாளர்களாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்து ஓராண்டாகிறது என்பதையும், இந்த ஓராண்டில் அமைப்பு களின் செயல்பாடுகள் என்ன என்பது பற்றிய அறிக்கையை அளிக்குமாறு அமைப்புகளின் பொறுப்பாளர்களையும், தொடர்ந்து மாநில துணைத் தலைவர்கள் தங்களுடைய பணி பற்றிய அறிக்கையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் பிறந்த நாள், அய்யா நினைவு நாள் நிகழ்வு களை கருத்தரங்குகளாக, அரங்க கூட்டங்களாக ஆண்டு முழு வதும் நடத்தப்பட வேண்டும் என்றும், பள்ளி , கல்லூரி மாண வர்களுக்கான நிகழ்ச்சிகள் பற்றியும், மாடர்ன் ரேஷன லிஸ்ட், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, திராவிடப் பொழில் சந்தா சேர்ப்பு பணி பற்றியும், ஆசிரியர் பிறந்தநாள் மலர் விளம்பரம் தொடர்பா கவும் பேசினார்கள்.
தொடர்ந்து மாநிலத் துணைத் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு மாநில பகுத் தறிவாளர் கழக தலைவர், பொதுச் செயலாளர் கலந்து ரையாடல் கூட்டத்திற்கு வரும் தேதியை மாவட்டங்களில் கலந்து கொண்டு உறுதி செய்ய வேண்டும் என்றும், மாவட்டம் தோறும் பகுத்தறிவு பயிற்சி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்றும் அது தொடர்பான கருத்துகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, பஞ்சாபில் பர்னாலாவில் நடை பெற்ற திமிஸிகி மாநாட்டு நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கினார்கள்.
முதலில் பகுத்தறிவாளர் கழ கத்தின் அறிக்கையினை பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசனும், தொடர்ந்து பொதுச்செயலாளர் வி மோகனும் தங்களுடைய அறிக்கையை படித்தார்கள் .
மாநில பொறுப்பாளர்கள் அண்ணா சரவணன், அ..தா. சண்முகசுந்தரம், புயல் குமார் , ந.கரிகாலன், கோபு. பழனிவேல், புதுவை நடராஜன், இளவரசி சங்கர், மாநில அமைப்பாளர் இல. மேகநாதன், மாநில அமைப் பாளர் கே. டி. சி. குருசாமி ஆகி யோர் தங்களுடைய மாவட் டங்களின் செயல்பாடுகள் எடுத் துரைத்தார்கள்.
அவர்களை தொடர்ந்து பகுத்தறிவு கலைத்துறை செய லாளர் மாரி .கருணாநிதி பயி லரங்கம், குறும்படப்போட்டி, கலை விழா செயல்பாட்டு விவ ரங்களை எடுத்துரைத்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் வா.நேரு எழுத்தாளர் மன்ற வாராந்திரக்கூட்டம் பற் றியும் நூல் ஆய்வுரை பற்றியும் எடுத்துரைத்தார். எமரால்ட் கோபாலகிருஷ்ணன் நினைவு சிறுகதைப்போட்டி நடத்தியது பற்றி கூறினார்.
பகுத்தறிவு கல்லூரி ஆசிரியர் அணியினுடைய அமைப்பாளர் பேராசிரியர் அருட்செல்வன் தங்களுடைய செயல்பாடுகளை பற்றியும், ஆசிரியர் பணி தலை வர் தமிழ் பிரபாகரன் ஆசிரியர் அணியினுடைய செயல்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத் தார்கள்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நிறைவுரையில் ஆசிரியர் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் ,தந்தை பெரியார் நினைவு நாளினை யொட்டி கருத்தரங்கங்கள், அரங்க கூட்டங்கள் நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பகுத்தறிவாளர் கழக தலை வர், பொதுச்செயலாளர் பய ணத் திட்டத்தை இறுதி செய்யு மாறு மாநில துணைத் தலை வர்களைக் கேட்டுக்கொண்டார்.
இறுதியாக பொதுச் செயலா ளர் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment