தஞ்சை திருக்குறள் ச.சோமசுந்தரம்
நகலகம் சென்றேன்
பெரியார் படம் நகலெடுக்க
நகலெடுத்துத் தந்தார் நகலகர்
பார்த்தேன்
ஆசிரியர் வீரமணி படம்
இரண்டும் ஒன்றுதானே!
மகிழ்ந்தேன்.
கலைஞர் கேட்டார் - இரவலாக
அண்ணாவின் இதயத்தை
பெரியார் தந்தார் தன்னையே
ஆசிரியரின் இதயத்துக்கு!
ஆசிரியரின் கண் இருநோக்கு
ஒருநோக்கு பெரியார்
ஒருநோக்கு 'விடுதலை'!
இலட்சியமோ இரண்டு
ஒன்று கல்வி
ஒன்று சமூகநீதி!
ஆயுதமோ இரண்டு
ஒன்று பெரியார் நுண்ணாடி
ஒன்று பெரியாரின் பேனா!
விருப்பமோ இரண்டு
(மிக முக்கியமாக)
ஒன்று நிறுவனங்களின் வளர்ச்சி
ஒன்று பெரியார் உலகம்!
காக்க நினைப்பதோ இரண்டு
ஒன்று திராவிடர் கழகம்
ஒன்று `திராவிட மாடல்' ஆட்சி!
நாலெழுத்து நாயகருக்கு
நாலெழுத்தே மூச்சு
பெரியார் -(ராமசாமி) - விடுதலை!
திராவிடர்க்கு இடையூறா
வளர்ச்சிக்குத் தடையா?
முதலில் வெடிக்கும் விடுதலையில்
அறிக்கைகள் பல
பெரியார் நுண்ணாடி கொண்டு
தொடரும் பிரச்சாரம்
போராட்டம்
வெற்றியோ நிச்சயம் - (அதனால்)
அனைத்துக் கட்சித் தலைவர் நோக்கும்
பெரியார் திடல் நோக்கியே! (காரணம்)
அவர் எல்லோருக்கும் ஆசிரியர்!
(அவர்) கொடுத்த விலையோ ஏராளம்!
மிசா தாக்குதல்
கொலைமுயற்சி ராயபுரத்தில்
ஆர்.ஸ்.எஸ்ஸால்
சென்னையிலும்கூட
மறக்க முடியுமா
மம்சாபுரத்தை
திருச்சியிலும்கூட
முயற்சி
சங்கிகளின் சதி
இப்போதும்கூட -
பூணூல் இதழ்களில் சூசகம்
எதையும் தாங்கும் இதயமல்லவா?
பெற்ற வெற்றியோ ஏராளம்!
மண்டல் குழு பரிந்துரை
69 சதவிகித இடஒதுக்கீடு
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆலயத்தில்
திராவிடர்க்கு விளைவிக்கும் கேடா
உடன் எதிர்க்கும் துணிவல்லவா!
நீட் எதிர்ப்பு
புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு
இந்தி சமசுகிருத எதிர்ப்பு
தற்போதைய ஆளுநரை எதிர்ப்பது,
ஆசிரியரின் முழக்கங்களோ இரண்டு
"நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது!
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!"
"திராவிடம் வெல்லும்
நாளைய வரலாறு அதைச் சொல்லும்"
மணமக்களுக்கு வேண்டுகாள் ஒன்று
கைவிட்டுவிடாதீர் - தாய் தந்தையரை
ஒன்றிய அரசுக்கு விடும் சவாலோ ஒன்று
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் அட்டை
(என்கிறீரே)
சட்டமியற்றுவீரா? ஒரே ஜாதியென்று!
பணிவுடையன், இன்சொலனாதல் ஒருவர்க்கு அணி
வள்ளுவன் வாக்குக்கு
இலக்கணம் வீரமணி
ஆரியர் - திராவிடர் போராட்டத்தில்
திராவிடர் வெற்றிபெற - 10லும் 90லும்
போராட்டக் களத்தில் நாளும் ஓய்வின்றி உழைக்கும்
ஆசிரியர் வாழ்க! வாழ்கவே!!
காலவரையறையின்றி வாழ்க! வாழ்கவே!!
No comments:
Post a Comment