கருத்துக் கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

கருத்துக் கணிப்பு பொய்யானது: இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ் கட்சி

சிம்லா, டிச. 9- இமாச்சல பிரதேசத்தில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெற்று பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்புகள், இழுபறி ஏற்படும் என கூறி வந்த நிலையில், அது பொய்யாக்கப்பட்டு உள்ளது.

68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்றத்துக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் கடந்த ஒரு மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு  நேற்று (8.12.2022) வாக்குகள் எண்ணப்பட்டன.

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிரப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன. மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது.

68 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். 

இதனால் பாஜக 25 தொகுதி களிலும் வெற்றி பெற்றாலும், சுயேச்சை ஆதரவுடன் கூட பெரும்பான்மை பெற முடியாத நிலை உள்ளது. 

பதவி விலகினார் பாஜக முதல்வர் 

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் பான்மை பெற்றுள்ள நிலையில், அங்கு தோல்வியை சந்தித்த ஆளும் பா.ஜ.க. அரசின் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் பதவி விலகினார்

மொத்தமுள்ள தொகுதிகளில் 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில்,  காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது இதையடுத்து  மாநில பாஜக முதல்வர் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தனது  முதல்மைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

No comments:

Post a Comment