எங்களின் அன்பிற்குரிய நண்பரும் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவருமான
ஏ. என். ராதாகிருஷ்ணன் மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகி றோம். ஏ.என்.ராதாகிருஷ்ணன் தொலை நோக்குப் பார்வையுள்ள கல்வியாளர், உயர்ந்த மனிதநேய முள்ள குணமுடையவராக தனி ஒருவராய் நின்று மீனாட்சிக் கல்விக்குழுமத்தை நடத்தி வந்தவர் ஆவார். அத்தகைய பெருமகனாரின் மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தாருக்கும் மீனாட்சிக் கல்வி குழுவினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment