16.12.2022
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
* கே.சி.ஆர். துவக்கியுள்ள அகில இந்திய கட்சியான பாரத் ராட்டிரா சமிதியின் விவசாய பேரணியை மகாராட்டிராவில் நடத்திட முடிவு.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* இசைத் திருவிழாவில் தமிழ் மொழிக்கு முக்கியத் துவம் வேண்டும் என மியூசிக் அகாடமியில் நடைபெற்ற இசைத் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.
தி இந்து:
* ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, குரூப் ஏ பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி அதிகாரி களின் சதவீதம் முறையே 13.21%, 6.01% மற்றும் 18.07% என ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.
* பெங்களூருவின் குடிமை அமைப்பான-ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) க்கு தேர்தல்களுக் கான ஓபிசி இடஒதுக்கீடு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க அதன் ஆணையத்திற்கு மார்ச் 31, 2023 வரை கால அவகாசம் அளிக்குமாறு கருநாடக அரசு விடுத்த கோரிக் கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தி டெலிகிராப்
* இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டை தற்போதைய 27 சதவீதத்தில் இருந்து உயர்த்துவதை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது, சமூக நீதித்துறை இணைய மைச்சர் பிரதிமா பூமிகோன் மாநிலங்களவையில், அரசாங்கத்தின் முன் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பி.சாய்நாத், அரசமைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள நலன்புரி தமிழ்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்
- குடந்தை கருணா
No comments:
Post a Comment