சென்னை, டிச.5 வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (5.12.2022) திங்கட்கிழமை உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது 7-ஆம் தேதி இரவு), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடை யக்கூடும் என்றும், வருகிற 8-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) தமிழ்நாட்டின் வட மாவட் டங்கள் -புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக் கூடும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது
இதன் காரணமாகவும், குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்றும் (5.12.2022), நாளையும் (6.12.2022) தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை மறுதினம் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்க ளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடு துறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்
தமிழ்நாட்டில் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், புதுக்கோட்டை மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங் களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
இதைப்போல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, பெரம் பலூர், அரியலூர், திருச்சி, சிவ கங்கை, ராமநாதபுரம் மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்சொன்ன மிக கன மழை பெய்யக்கூடிய இடங் களுக்கு நிர்வாக ரீதியாக விடுக் கப்படும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு, ஒன்றிய மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தமிழ்நாடு-ஆந்திர கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளை மறுதினமும், அதற்கு அடுத்த நாளும் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment