22.12.2022
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள் அனைவரையும் துரோகிகள் என மோடி அரசு விமர்சிப்பது சரியல்ல என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஅய்), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றும் கனரா வங்கி ஆகியவற்றின் இயக்குநர்கள் குழுவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை ஓபிசி நாடாளுமன்றக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தி டெலிகிராப்:
நரேந்திர மோடி அரசு பின்தங்கிய பிரிவினருக்கு உத வித்தொகை வழங்குவதற்குப் பதிலாக அதனைத் திரும்பப் பெறுகிறது. மத சிறுபான்மையினருக்கான மெட்ரிக் முன் உதவித்தொகையை ஒரு குடும்பத்தில் இருந்து இருவருக்கு மட்டுமே வழங்குவது அதன் முந்தைய நடவடிக்கைகளில் ஒன்றாகும், ஆனால் இப்போது 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு அது கிடைக்காது.
தி ஹிந்து:
செப்டம்பர் 2021 மற்றும் 2022க்கு இடையில் அடை யாளம் காணப்பட்ட 1,439 காலியிடங்களில், 449 இடங்கள் மட்டுமே ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment