முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது : அமைச்சர் ரகுபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 11, 2022

முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது : அமைச்சர் ரகுபதி

சென்னை டிச.11 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ் நாட்டில், சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசினார். 

 பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், பன்னாட்டு மனித உரிமைகள் தினம் நேற்று  (10.12.2022) கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந் தினராக கலந்துகொண்ட, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா   நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் கே.விஜய கார்த்திகேயன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றார்.

 கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: மனித உரிமை என்பது அவரவர்களுடைய பிறப் புரிமை. சமூக நீதி, மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம் என்பதை நோக்கி தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது. மனித உரிமை களின் பாதுகாவலராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உள்ளது. தமிழ் நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டத் தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. சட்டத்தின் பலன் ஏழை-_எளிய மக் களுக்கு கிடைக்க செய்வதற்கான மக்களின் அரசாக தமிழ்நாடு அரசு விளங்குகிறது. இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் பெருகி வரும் நிலையில் சட்டங்களை நவீனப் படுத்தவேண்டும். அதற்காக அனைத்து மாவட்டங் களிலும் சட்டக்கல்லூரிகள் தொடங்கும் முனைப்பில் அரசு உள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment