ஜெய்ப்பூர், டிச. 13- ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணம் மீண்டும் துவங்கியது.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக் காக ராகுல் காந்தி கன்னியா குமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைப்பயணம்” மேற்கொண்டு வருகிறார்.மொத் தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த நடைப்பயணத்தில் தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ள துடன், தமிழ்நாடு, கேரளா, கரு நாடகா, தெலுங்கானா, மகராட் டிரா மாநிலங்களைக் கடந்து தற்போது ராஜஸ்தானில் நடை பெற்று வருகிறது.
ராஜஸ்தானின் ஜீனாபூர், சவாய் மாதோபூரில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நடைப் பயணம் மீண்டும் துவங்கியது. 2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கிலும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலி யுறுத்தும் வகையிலும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னி யாகுமரியில் தொடங்கிய ராகுலின் நடைப்பயணம் தற்போது, ராஜஸ் தானில் நடைபெற்று வருகிறது.
தற்போது ராஜஸ்தானின் பூண்டி பகுதியில் நடைப்பயணம் தொடங்கியது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா, பிரியங்கா மகள் மிராயா வத்ரா ஆகியோர் கலந்து கொண் டனர். ராஜஸ்தானில் மகிளா சசக் திகரன் திவாஸ் என்ற விழா கொண்டாடப்பட்டு வரும் நிலை யில், ராகுல்காந்தி பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் நடைப்பயணத்தில் பெரும்பா லான பெண்களுடன் கலந்து கொண்டார்.
மேலும், அவரது நடைப்பய ணத்தின்போது, பெண்கள் மற்றும் கலைக்குழுவினர், பாரம்பரிய ராஜஸ்தானி ஆடைகளை அணிந்து நாட்டுப்புற பாடல்களை பாடி ஆடி வரவேற்றனர். அப் போது, அவர்கள் பிரியங்கா காந்தி யையும் தங்களுடன் ஆட அழைத்த னர். அதைதொடர்ந்து, அவரும் சிறிது நேரம் அவர்களுடன் ஆடி மகிழ்ந்தார். இந்த நடைப்பயண மானது, ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தின் பீபுல் வாடாவில் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment