லாலு பிரசாத் : சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் நலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 13, 2022

லாலு பிரசாத் : சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் நலம்

தேஜஸ்வி தகவல்

பாட்னா,டிச.13- சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தையும், அவ ருக்கு சிறுநீரகம் கொடை அளித்த எனது சகோதரியும் நலமாக இருப்பதாக தேஜஸ்வி யாதவ் கூறினார். பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் தந்தையான மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்காக கடந்த சில வாரங் களுக்கு முன் சிங்கப்பூர் சென் றார். அவருக்கு அங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவரது மகள் ரோகினி ஆச்சார்யா தனது ஒரு சிறுநீரகத்தை தனது தந்தைக்கு கொடையாக வழங்கினார். தனது தந்தையின் அறுவை சிகிச்சைக்காக பீகாரில் இருந்து தேஜஸ்வி யாதவும் சென்றிருந்தார். தற்போது அவர் பாட்னா திரும்பிய நிலையில், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தற்போது லாலு பிரசாத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவரது கிட்னியும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. தந்தைக்கு சிறுநீரகம் கொடை வழங்கிய எனது சகோதரி ரோகினி ஆச்சார்யாவும் நலமாக உள்ளார். பீகாரின் குட்னி இடைத்தேர்தலில் எங்களது கட்சி தோல்வி அடைந்துவிட்டது. உள்ளூர் பிரச்சினைகளால் தோல் வியை சந்திக்க நேரிட்டது. இமாச்சல் மற்றும் டில்லி மாநக ராட்சி தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. குட்னி தொகுதியில் மட்டுமே நாங்கள் தோல்வியடைந் தோம்; ஆனால் பெரும்பாலான இடங்களில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது’ என்றார்.







No comments:

Post a Comment