சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்
கோவை,டிச.10- கோவை அரசு மருத் துவக்கல்லூரி, அரசு மருத்துவமனையில் ரூ2.5 கோடியில் புனர மைக்கப்பட்ட கட்ட டம் உள்பட கோவை மாவட்டம் முழுவதும் ரூ.8.78 கோடி செல வில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகர ணங்களை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், செந்தில் பாலாஜி ஆகி யோர் நேற்று (9.12.2022) திறந்து வைத்துப் பேசுகையில், கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மாணவரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி தற்போது 200 மாணவர்கள் பயில அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும், 1,550 புதிய இடங்களுக்கு ஒப் புதல் தரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான், அதிகளவில் ஆண்டுதோறும், அதிக மருத்துவ மாணவர்கள் பயில்கின்றனர். டில்லியில் மக்கள் நெருக் கடியான இடத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றை பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் அதேபோல் 709 நகர்ப்புற நல மய்யங்கள் கட்டவும் நிதி ஒதுக்கியுள்ளார் என்றார்.
மாண்டஸ் புயலால் தமிழ்நாடு முழுவதும் மழை!
3,863 பாசனக் குளங்கள் நிரம்பி
முழு கொள்ளளவை எட்டின
சென்னை,டிச.10- தமிழ்நாட்டில் 3,863 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பி யுள்ளன. மாண்டஸ் புயல் காரணமாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு அணைகள், பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றன. அந்த வகையில்,
தமிழ்நாட்டில் 3,863 பாசனக் குளங்கள் முழு கொள் ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசனக் குளங்களில் 820 குளங்கள் நிரம்பின.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசனக் குளங்களில் 399 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 218 குளங்கள் நிரம்பின.
சிவகங்கை 205, திருவண்ணாமலை 308, புதுக் கோட்டை 174, ராணிப்பேட்டை தலா 178, திருவள்ளூர் 183 குளங்கள் நிரம்பின. காஞ்சி 146, கள்ளக்குறிச்சி 93, விழுப்புரம் 89, கிருஷ்ணகிரி 78, தென்காசி 221, ஈரோடு 14, குமரி 25 குளங்கள் நிரம்பியுள்ளன.
மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு
நாகையை அடுத்த நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் உள்ளது. இந்த மீனவ கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு சுனாமிக்கு பின் வெட்டாற்று கரையில் இருந்து தெற்கே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மீனவ கிராமங்கள் ஒட்டிய பகுதியில் கடற்கரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் உள்வாங்கி வருகிறது. கிராமத்தில் கடற்கரையில் தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போது மாண்டஸ் புயல் காரணமாக வழக்கத்தைவிட 12 அடிக்கு மேல் கடல் நீர் கரைக்கு வந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புயல் எதிரொலியாக 20 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தது; 11 ஆடுகள், கோழிகள் உயிரிழந்தன. 1 மின்கம்பம் சரிந்து விழுந்தது. அலையின் அதீ வேகத்தின் காரணமாக கடற்கரையோரத்தில் உள்ள கூரை வீடுகளில் கடல் நீர் உட்புகுந்ததால் வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிர்த்து வருகின்றனர். நேற்று தினம் புயல் பாதுகாப்பு மய்யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவ மக்கள் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்றுத் திறனாளிகள் மரப்பாதையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை மாநகராட்சி
சென்னை, டிச.10 மெரினா கடற்கரைக்கு மாற்றுத் திறனாளிகள் வந்து செல்லும் வகையில் மரப்பாலம் அமைக்கப்பட்டது இரண்டு வாரங்களுக்கு முன் இதனை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாண்டஸ் புயல் காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட இந்த மரப்பாலத்தின் கடல் நோக்கியுள்ள பகுதியில் சில மூங்கில் பாகங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இந்தப் பாலத்தை பயன்படுத்துவதை தாற்காலிகமாக நிறுத்தப்பட் டுள்ளது. ஈரம் மற்றும் காற்றில் துருப்பிடிக்காமல் இருக்க 263 மீட்டர் நீளத்துக்கு மரத்தால் ஆன பாலம் அமைக்கப்பட்டு கடலில் இருந்து 20 மீட்டர் முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
நடைபாதை சேதம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது செய்தியாளரிடம் பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரி இந்த மரப்பாலம் அமைக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் இது செயல்பாட்டுக்கு வரும் குறிப்பிட்ட காலத்துக்குள் சேதம் ஏற்பட்டால் அதனை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்த காலக்கெடு இன்னும் முடிவடையாமல் உள்ள நிலையில் இதற்கான முழுச்செலவையும் ஒப்பந்ததாரர் ஏற்றுக்கொண்டு இதனை மீண்டும் சரிசெய்ய தேவையான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment