புதுடில்லி,டிச.23- மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புது விதமான டெக்னிக்கை மோசடியா ளர்கள் பின்பற்றத் தொடங்கி யுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப் பின்பற்றி டில்லி வாசி ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.
வங்கிக் கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள் ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான இணைய இணைப்புகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற் றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகு மொபைல் தொலைந்து போனது அல்லது பழைய சிம் சேதமடைந் ததாக கூறி டூப்ளிகேட்சிம்மை மோசடியாளர்கள் பெற்று விடு கின்றனர்.
இதையடுத்து, பணப் பரிமாற் றத்துக்கு இறுதி பாதுகாப்பாக கருதப்படும் ஓடிபி மோசடியா ளர்களின் புதிய சிம்முக்கு சென்று விடுகிறது. இதையடுத்து, அந்த மோசடிக் கும்பல் வங்கி கணக்கி லிருந்த அந்த வாடிக்கையாளரின் பணத்தை எளிதாக தங்களது கணக்குக்கு மாற்றிக் கொண்டு விடுகிறது. இதனை "சிம் ஸ்வாப்" மோசடி என்கின்றனர் காவல்துறையினர். இதே வழியில்தான் டில்லி வாசியின் மொபைல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து பணத்தை சுருட்டி ஏமாற்றியுள்ளனர்.
தெரியாத எண்கள், நபர்களி டமிருந்து நமதுகணக்குக்கு வரும் மின்னஞ்சல்களை திறப்பதை, பதிவிறக்கம் செய்வதை அல்லது இணைப்பை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வங்கி களில் இருந்து பேசுவதாக கூறும் நபர்களிடம், நம்முடைய கணக்கு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் உள்ளிட்ட எந்த விதமான சுய விவரங்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெ னில், வங்கி அல்லது எந்தவொரு செல்பேசி சேவை நிறுவனங்களும் அதுபோன்ற விவரங்களை ஒருபோதும் வாடிக்கையாளரிடம் கேட்பதில்லை.
அப்படி மீறி அச்சுறுத்தல் ஏற் படுத்தும் தொலைப்பேசி அழைப் புகள் குறித்து உரிய வங்கி அல்லது நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரி களிடம் உடனடியாக தெரிவித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment