சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு தயாராக உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழர் திருநாளான பொங்கல் விழாவையொட்டி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். வீரவிளை யாட்டான இதனை காண வெளி மாநிலம் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் மதுரையை நோக்கி படையெடுத்து செல்வார்கள். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக நடந்த போராட்டத்தின் பயனாக கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு கட்டுப் பாடுகளுடன் ஜல்லிக்கட்டு எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் இந்த போட்டி கோலாகலமாக நடை பெறுவது வழக்கம். இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக் கட்டுக்கு தடை கோரி, உச்சநீதிமன்றம் பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப் புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் ஒன்றிய அரசு தரப்பில் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டத் துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். காளைகளை துன்புறுத் தாமல் ஜல்லிக்கட்டு பாதுகாப்பாக நடத்தப்படுகிறது என்று வாதிடப் பட்டது. அனைத்துதரப்பு விசார ணையும் நிறைவுபெற்ற நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர். நடத்த தயார் எனவே வருகிற பொங்கல் திருநாளை யொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் ஜல்லிக்கட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட் டாளர்கள் தொடங்கி விட்டனர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, '2023ஆ-ம் ஆண்டு பொங்கலுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதுவரை அதற்கு எந்த தடையும் விதிக் கப்படவில்லை. எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளை 2017-ஆம் ஆண்டு அமல் படுத்தப்பட்ட சட்டப்படி நடத்த முடியும். ' என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment