கர்ப்பத்தை கலைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 8, 2022

கர்ப்பத்தை கலைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, டிச.8 33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது.  

டில்லியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பெண், திருமணத் துக்குப் பின்னர் கர்ப்பம் தரித்தார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு 'ஸ்கேன்' பரிசோ தனை செய்து பார்த்தபோது, அவரது கருக்குழந்தை பெரு மூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறி யப்பட்டது. இது அவருக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. இப்படிப்பட்ட குழந் தையைப் பெற்றெடுத்து, அந்த குழந்தை காலமெல்லாம் அவதி களுடன் மருத்துவ சிகிச்சையை சார்ந்து வாழ்வது மிகக் கொடு மையானது என கருதினார். இதனால் அவர் கருவைக் கலைப்பதற்காக டில்லி குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட் டத்தின்படி 24 வாரங்களுக்குள் தான் கருக்கலைப்பு செய்ய முடி யும், அவரது கர்ப்பம் 24 வாரங் களைக் கடந்து விட்ட தால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத் தான் கருக்கலைப்பு செய்ய முடியும் என கூறி விட்டனர்.

இதையடுத்து அவர் கருக் கலைப்புக்கு அனுமதி கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர்நீதி மன்ற விசாரணையில்  தனது கருக்குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப் பட்டிருப்பது, நவம்பர் 12-ஆம் தேதிதான் தெரிய வந்துள்ள தாகக் கூறி, தான் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் அந்த பெண் கேட்டுக் கொண் டிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பிரதிபா எம்.சிங் விசா ரித்தார். வழக்குதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் அன்வேஷ் மதுக்கர், பிராச்சி நிர்வாண் ஆகியோர் ஆஜராகி வாதாடி னார்கள். விசாரணை முடிந்த நிலையில், வழக்கைத் தொடுத் துள்ள பெண், தனது 33 வார கருவைக்கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து நீதிபதி பிர திபா எம்.சிங் நேற்றுமுன்தினம் (6.12.2022) தீர்ப்பு வழங்கினார். அந்தப் பெண் டில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாரா யண் மருத்துவமனையிலோ அல்லது குரு தேக் பகதூர் மருத் துவமனையிலோ அல்லது சட் டப்படி அனுமதி பெற்றுள்ள பிற மருத்துவ மனைகளிலோ கருக்கலைப்பு செய்து கொள்ள லாம் என நீதிபதி தீர்ப்பில் கூறி உள்ளார். இந்த தீர்ப்பில் நீதிபதி கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-  

"ஒரு கர்ப்பிணிப் பெண், தனது கர்ப்பத்தை கலைக்கும் உரிமை, உலகமெங்கும் விவாதப் பொரு ளாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியா தனது சட்டத்தில் இந்த விஷயத்தில் பெண் தேர்வு செய்து கொள்கிற உரிமையை அங்கீகரிக்கிறது. 

* மருத்துவ குழு,  ஊனத்தின் அளவு அல்லது கருக்குழந்தை பிறப்பின் பின்னர் வாழும்விதம் குறித்து குறிப் பிடத்தக்க கருத்து எதையும் வழங்கவில்லை. இத னால், அத்தகைய எதிர்பாராத நிலையில் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண் ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். 

* அத்தகைய சந்தர்ப்பங்களில், இறுதி முடிவு எடுப்பதில் தாயின்  விருப்பத்தை அங்கீகரிக்க வேண்டும். பிறக்காத குழந்தை யின் கண்ணியமான வாழ்க் கைக்கான வாய்ப்பை அங்கீ கரிக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைத்துக்கொள்ள அனுமதிக் கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment