மருந்துக் கடைகளில் மருந்தாளுநர்கள் அடையாள அட்டையுடன் வெண்ணிற அங்கி அணிய அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

மருந்துக் கடைகளில் மருந்தாளுநர்கள் அடையாள அட்டையுடன் வெண்ணிற அங்கி அணிய அறிவுறுத்தல்

சென்னை,டிச.6- தமிழ்நாடு முழுவதும் மருந்து கடைகளில் பணிபுரியும் மருந் தாளுநர்கள் வெண்ணிற அங்கி, அடை யாள அட்டை அணிய வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) பி.வி.விஜயலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 40 ஆயிரம் சில்லறை மருந்து கடைகள், மருந்தகங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்த கங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிகின்றனர்.

அதேநேரம் சில்லறை மருந்துக் கடைகள் மற்றும் சில மருந்தகங்களில் மருந்தாளுநர்கள் வெண்ணிற அங்கி மற்றும் அடையாள அட்டையை அணிவதில்லை. இந்நிலையில், அனைத்து மருந்தாளுநர்களும் வெண்ணிற அங்கி, அடையாள அட்டை அணிய வேண் டுமென மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் (பொறுப்பு) பி.வி.விஜயலட்சுமி அறிவுறுத் தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: "மாநி லத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்து கடைகள், மருந்தகங்கள் மற்றும் மருத்துவ மனைகளுடன் இணைந்த மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்கள், பணி நேரங் களில் கட்டாயம்வெண்ணிற அங்கி, அடை யாள அட்டை அணிந்து பணிபுரிய வேண் டும்” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment