சென்னை, டிச 23 தமிழ்நாட்டில் காப்புக் காடுகள், பறவைகள் சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது என்றும் ஏற் கெனவே குவாரிகள் இருந்தா லும் அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளார்.
சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் சென்னை பெரு நகரை மாசுபாடு இல்லாத நகராக உருவாக்குவது குறித்த கருத் தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அமைச்சர் மெய்ய நாதன் கூறுகையில், ”இந்த கருத் தரங்கு செய்ய சொல்வதை தமிழ் நாடு அரசு ஏற்கனவே தொடங்கி உள்ளது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் என்பதை தமிழ் நாடு அரசு தொடங்கியுள்ளது. இதற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட் டமாக கடற்கரை பகுதிகளில் 500 கிலோமீட்டர் தேர்வு செய்து பனைமரங்கள் நடவு, பசுமை பள்ளிகள், பசுமை கோயில்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளது. கோயம்பேடு கார்பன் மாசு இல்லாத இடமாக மாற்றப் படும். பசுமை பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமூக நீதியை உலகிற்கு எடுத்து கூறும் இடமாக தமிழ்நாடு இருப்பது போல் சுற்றுச்சூழலியலை உல கிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் தமிழ்நாடு உள்ளது. காப்புக்காடு, பறவை சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது. ஏற்கெனவே இருந்தாலும் அதுவும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் படும். தமிழ்நாடு முதலமைச்சர் இயற்கையை பாதுக்கக்கும் அரணாக இருக்கிறார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை என்று அமைச்சர வைக்கு பெயர் மாற்றம் செய்ததில் தொடங்கி தமிழ்நாடு முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு 1,30,000 சதுர கிலோ மீட்டர். இதில் 42 ஆயிரம் சதுர கிலோமீட்டருக்கு மேல் வனப் பரப்பு இருக்க வேண்டும். ஆனால் 31,199 சதுர கிலோமீட்டர் தான் வனப்பரப்பு இப்போது உள்ளது . சட்டப்படி 33 சதவீதம் வனப் பரப்பு இருக்க வேண்டும். ஆகை யால் 9% வனப்பரப்பை அதிகப் படுத்த வேண்டிய சூழலில் உள் ளோம். அடுத்த 10 ஆண்டுளில் வனப்பரப்பை அதிகரிக்க திட்ட மிட்டுள்ளோம்.
ஆண்டுதோறும் 10 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். ஏன் பசுமை பரப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் மரங்கள் தான் கார்பனை எடுத்துக்கொண்டு ஆக்சிசனை வழங்கக் கூடியது. இயற்கை, தன்னை தானே செய்து கொள்ளும். கார்பன் மாசு உற்பத் தியில் மின் திட்டங்கள்தான் உள்ளது. ஆனால் மின்சாரம் தேவை இருக்கிறது. இதனால் தான் தமிழ்நாடு அரசு சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட மின்சா ரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இருந்தாலும் முழுமையாக அந்த வகையில் முழுவதும் பெற முடி யாத நிலை உள்ளது. ஆகவே மின்சார பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும். ஒவ்வொரு வரும் நினைத்தால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் மின்சாரம் சேமிக்க லாம். உங்கள் வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை தேவை முடிந்ததும் நிறுத்தி வைக்கவும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும். சென்னையில் ஒரு நாள் மின்சார தேவை 3000 மெகாவாட். ஆனால் இதே அளவுதான் கேரளா மாநிலத்தின் ஒரு நாள் மின்சார தேவையான உள்ளது. கார்பன் மாசுபாட்டை குறைக்க வாகன போக்குவரத்தையும் குறைக்க வேண்டும். பொது போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்.
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து பயன்படு அதிகரித் துள்ளது. இது மாசுபாட்டை குறைக்க உதவும். நான் அமைச்சராக இருந்தாலும் அதிக வாகனங்களில் அணிவித்து செல்வது இல்லை. தனி வாகனத்தை பயன்படுத்தி வருகின் றனர். இயற்கை பேரிடர் ஏற்படும் போது நாம் மட்டுமல்ல எந்த தவறும் செய்யாத பறவைகள், விலங்குகள், பல உயிர்கள் பாதிக்கப்படும். ஆகவே கால நிலை மாற்றத்தை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment