திருச்சி, டிச. 5- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவ னத் தலைவர், தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்க ளின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளினை (02.12.2022) முன் னிட்டு 1.12.2022அன்று மாலை 3 மணியளவில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கருத்தரங்கம் கல்லூரி யின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் கல் லூரி அரங்கத்தில் நடைபெற் றது.
இவ்விழாவில் பெரியார் மன்ற செயலர் க. அ. ச. முகம்மது ஷபீக் வரைவேற்புரையாற்ற, பெரியார் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் க. திலகவதி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அவர்தம் உரை யில் தந்தை பெரியார் அவர் களின் கொள்கை வாரிசாக அவர் கட்டிக்காத்த திராவிட இயக்கத்தையும் அவர் போட் டுத் தந்த பாதையில் சிறிதும் அடிபிறழாமல் மென்மேலும் சமுதாயம் பயன்பெறும் வகை யில் வழிநடத்திவருபவர் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
தமிழர் தலைவர் தன்னு டைய பத்து வயது முதல் சமு தாய பணியாற்றி வருகிறார், 90 ஆண்டு வாழ்க்கையில் முக்கால் நூற்றாண்டு காலம் பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அவர் தன்னுடைய அறிவாற் றால், சொல்லாற்றால் மற்றும் எழுத்தாற்றல் முழுவதையும் சமுகத்தில் பின்தங்கிய மக்க ளின் மேம்பாட்டிற்காக பயன் படுத்தி வருபவர். 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டிலும், மண்டல்கமிஷன் பரிந்துரை யின் அடிப்படையில் 27 சத விகிதம் அகில இந்திய அளவி லும் பின்பற்றப்படுகிறது என்று சொன்னால் தமிழர் தலைவர் அவர்களின் முழு முயற்சியால் மற்றும் கடும் போராட்டத்தினால் கிடைத்த வெற்றியாகும்.
சமூக நீதியின் தலைநகரமாக தமிழ்நாடு சிறந்து விளங்க கார ணம் கி.வீரமணி தான் என்று சமூக நீதி காவலர் மேனாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களால் பாரட்டப்பட்டவர். மேலும் வளர்ந்து வரும் இளம் சமுதா யத்திற்கு வழி காட்டக்கூடிய ஒரு தலைவர் இருக்கின்றார் என்றால் அது தமிழர் தலைவர் ஆசிரியர் ஒருவர்தான்.
தாம் சார்ந்த இனம், மொழி, நாட்டிற்காக அதன் முன் னேற்றத்திற்காக. ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய வளர்ச்சிக் காக இன்றளவும் எந்தவித சபலங்களுக்கும் இடம்தராமல் பெரியாரின் கனவை நிறை வேற்றுவது ஒன்றே எம் பணி என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். வேந்தராக கல்விப்பணிகள், விடுதலை ஆசிரியராக பகுத்தறிவுப் பணிகள், இயக்கத்தலைவராக தொண்டறப்பணிகள், இவர் அரசியலில் இல்லாவிட்டா லும் இவர் இல்லாமல் அரசி யல் இல்லை என்ற அளவிலே மக்கள் பணிகள் என்று பல தரப்பட்ட பணிகளை திறம் படச் செய்து இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்குபவர்.
இந்நிகழ்வில் “சமூக நீதி போரட்டமும் தமிழர் தலைவ ரும்” மற்றும் “தமிழர் தலைவ ரின் தொண்டறப் பணிகள்” என்ற தலைப்புகளில் திராவி டர் மாணவர் கழக பொறுப் பாளர்கள் கருத்துரையாற்றி னர். முன்னதாக சாமி கைவல் யம் முதியோர் இல்ல பெரிய வர்களால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு நமது கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேராசிரி யர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக திராவிட மாணவர் கழக இணைச்செயலர் ரெ. இலக் கியா நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment