சிவமொக்கா, டிச. 22, சிவமொக்காவில் காஷ் மீரில் இருந்து வேலை தேடி வந்த இசுலாமிய இணையரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகி றார்கள்.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூ ருவை அடுத்த நாகுரி பகுதியில் குக்கர் குண்டு வெடித்து சிதறியது. இதில் பயங்கர வாதி யான முகமது ஷாரிக் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் முகமது ஷாரிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் என்.அய்.ஏ .(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள் ளனர். காவல்துறைனரின் முதற்கட்ட விசார ணையில் ஷாரிக் சிவ மொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதனால் சிவமொக்கா காவலர்கள் உஷாராகி யுள்ளனர். மேலும் கண் காணிப்புப் பணிகளை யும் தீவிர ப்படுத்தியுள் ளனர். இந்நிலையில் நேற்று (21.12.2022) சிவமொக்கா நகரில் உள்ள இலியாஷ் நகர் பகுதியில் இஸ்லாமி யப் பெண், ஆண் ஒருவரு டன் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று, வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப் போது ஹிந்துத்துவ அமைப்பினர் இது குறித்து சிவமொக்கா டவுன் காவல்துறையின ருக்கு தகவல் அளித்தனர்.
நிகழ்வு இடத்திற்கு சென்ற காவல்துறை, 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசா ரணையில் 2 பேரும் காஷ்மீரை சேர்ந்தவர் கள் என்று தெரியவந்தது. மிகவும் ஏழ்மை நிலை யில் இருக்கும் அவர்க ளுக்கு யாரும் வேலை கொடுக்க முன்வராத தால் வீடு, வீடாக உணவு மற்றும் பொருள் உதவி கேட்டுள்ளனர். மேலும் இருவரும் தங்குவதற்கு வீடு கிடைக்குமா என்று கேட்டதாக தெரியவந் தது. இதையடுத்து அவர் கள் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment