மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்வேன் - திட்டப் பணிகளை விரைவுபடுத்துவேன் : முதலமைச்சர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 9, 2022

மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்வேன் - திட்டப் பணிகளை விரைவுபடுத்துவேன் : முதலமைச்சர் அறிவிப்பு

தென்காசி,டிச.9- தென்காசியில் நேற்று (8.12.2022) நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் ரூ.22.20 கோடியில் முடிவுற்ற 57 திட்டப்பணிகளை தொடங்கி வைத் தார். தொடர்ந்து ரூ.34.14 கோடியில் 23 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட் டிப் பேசினார். 

அவர் பேசியதாவது: தென்காசி மாவட்டத்தில் இதுவரை 73,491 பயனாளிகளுக்கு பயிர்க் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்க ரூ.13 கோடி மதிப் பீட்டில் 1,823 புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 1,701 குடும்பங் களுக்கு வேளாண் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.95 லட்சம் செலவில் 50 ஆயிரம் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. சமூகப் பாது காப்பு திட்டத்தில் ஓய்வூதிய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. சங்கரன்கோவி லில் புதிய கோட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. 150 கோவில்களில் 84 அர்ச்சகர்கள், 6 பட்டாச்சாரியார்கள், 60 பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்திற்கான முக்கியமான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து அது தொடர்பாக சற்று முன்னர் அதிகாரிகளிடம் பேசினேன். அதில் முக்கியமான சில கோரிக் கைகளை உடனடியாக நிறைவேற்ற அறிவிப்பை வெளியிடுகிறேன். 

ரூ.10 கோடியில் சுற்றுலாத்தலம்

முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலையாக அமைந்துள்ள புளியங்குடி-சங்கரன்கோவில் சாலை மேம் படுத்தப்படும். தென்காசியில் புதிய விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். பனையூர்-கூடலூர் சாலை மேம்படுத் தப்படும். சிவகிரி மற்றும் ஆலங்குளம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் இலத்தூர் ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டில் சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த ஆட்சி காலத்தில் ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிக்கு முறையாக அனுமதி பெற வில்லை. தற்போது நமது தி.மு.க. ஆட் சியில் ஒன்றிய அரசிடம் மேல்மட்ட கால்வாய்க்காக அனுமதி கேட்கப்பட் டுள்ளது. விரைவில் அனுமதிக்குப் பின் பணிகள் தொடங்கும். 

மாணவிக்கு வாழ்த்து

இந்த மாவட்டத்தை சேர்ந்த சண்முகவல்லி என்ற மாணவி இந்திய குடிமைப் பணி தேர்வில் அகில இந்திய அளவில் 108ஆவது இடத்தை பிடித் துள்ளார். தமிழ்நாடு அளவில் 3ஆவது இடம் பிடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். 

இந்த மாவட்டத்தில் வினைதீர்த்த நாடார்பட்டியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் ஆராதனா என்ற சிறுமி, எங்களது பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதி உள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என் மீது குழந்தைகளும் இவ்வளவு நம்பிக்கை வைத்து கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளனர். சிறுமி ஆராதனா வைத்த கோரிக்கையை ஏற்று ரூ.35 லட்சம் மதிப்பில் அந்த பள்ளிக்கு முதல் கட்டமாக 2 வகுப்பறைகள் உடனடி யாக கட்ட உத்தரவிட்டுள்ளேன். 

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்

ஒவ்வொருவருடைய தேவையையும், ஒவ்வொருவரின் பிரச்சினையையும் அறிந்து நமது அரசு செயல்படுகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடி யாமல் எதிர்க்கட்சித் தலைவர் விடு பட்ட சில வாக்குறுதிகளை மட்டும் கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் பதில் அளிக்க விரும்பவில்லை. எங் களை நம்பி வாக்களித்தவர்களுக்கு உண்மையாகவும், உணர்வுப் பூர்வ மாகவும் உள்ளோம். 

நல்லாட்சிக்கு அடையாளம்

தமிழ்நாடு மக்கள் இருண்ட காலத் தில் இருந்து உதயசூரியன் காலத்திற்கு வந்துவிட்டனர். இந்தியாவில் தமிழ் நாடு முதலிடம் வரவேண்டும் என்பதே எனது லட்சியம், எனது குறிக்கோள். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. இதனை மக்கள் மனதில் நான் கண்டுகொண்டிருக் கிறேன். இந்த ஆட்சி தான் தொடர வேண்டும் என்று கூறி மக்கள் என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். திட்ட மிடுவது, திட்டமிட்டதை செயல்படுத் துவது தான் நல்லாட்சிக்கு அடை யாளம். அதுதான் எங்கள் இலக்கு. அடுத்தகட்டமாக மாவட்ட வாரியாக சென்று நான் அறிவித்த திட்டப்பணிகள் செயல்படும் விதம் குறித்து அமைச் சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். எந்த நோக் கத்திற்காக திட்டங்கள் வகுக்கப் பட்டது என்பதற்கான நோக்கத்தை கடைநிலை ஊழியர்கள் வரை அறிந்து செயல்பட வேண்டும். அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறை வேற்றி தருவோம். 

-இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வரவேற்று பேசினார். பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். விழாவில் அமைச் சர்கள் கே.என்.நேரு, இ.பெரியசாமி, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், சட்டமன்ற உறுப் பினர்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார், நெல்லை மாவட்ட செயலாளர்கள் ஆவுடையப்பன், அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment