- முனைவர் அதிரடி க.அன்பழகன்
தொண்ணூறில் அடி வைக்கும்
தொண்டறத் தலைவரே!
பகுத்தறிவுப் பார்படைக்க
பல்லாண்டு காலம் வாழ்க!
- தொண்ணூறில்
வித்தகர் அய்யா பெரியாரின்
சொத்தாக இருக்கும் உம்மை
தத்துவமே போற்று தய்யா
திராவிடமே வாழ்த்து தய்யா!
- தொண்ணூறில்
கழகத்தை வழி நடத்தும்
கருங்கடல் கப்பல் ஓட்டி
வருமுன் இடர் காட்டி
வாழ வைக்கும் வழிகாட்டி !
- தொண்ணூறில்
இலட்சியத்தைக் காத்து நிற்கும்
இனப்பகை மூச்சு அறுக்கும்
இணையில்லா நெஞ்சுரமே
ஈரோட்டார் வார்ப்படமே!
- தொண்ணூறில்
பெரியார் பணி முடிக்க
இனியார் எனத் தவிக்க
உரியார் நீர் இருக்க
உதிக்கும் பெரியார் உலகமப்பா!
***
No comments:
Post a Comment