விபத்து வழக்குகள்: முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிடக்கோரி வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 6, 2022

விபத்து வழக்குகள்: முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் வெளியிடக்கோரி வழக்கு

 சென்னை, டிச.6 விபத்து தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) உள்ளிட்ட ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரிய வழக்கிற்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.  சாலை விபத்தில் என 2 மகன்கள் பலியாகினர். இதுகுறித்து மதுரை அடுத்துள்ள கொட்டாம் பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தேன். 

ஆனால், விபத்து வழக்கு தொடர்பான ஆவணங் களுடன் தாக்கல் செய்யும்படி கூறி அந்த மனுவை தீர்ப்பாயம் ஏற்க மறுத்து விட்டது. விபத்து தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை (எப்.அய்.ஆர்.) உள்ளிட்ட ஆவணங்களை கேட்டபோது, கொட் டாம்பட்டி காவல்துறையினரும் அங்குள்ள காவலர் அரிச்சந்திரனும் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் கொடுக்காததால் என்னால் அந்த ஆவ ணங்களை பெற முடியவில்லை. 

அதுமட்டுமல்ல, விபத்து இழப்பீடு வழக்கும் தொடர முடிய வில்லை. என்னை போல தமிழ்நாடு முழுவதும் பலர் இதுபோன்ற ஆவணங்களை பெற முடியா மல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே விபத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறையினரின் பிரத் யேக இணையதளத்தில் உடனுக்குடன் பதி வேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், இந்த வழக்கிற்கு காவல்துறை தலைமை இயக் குநர்  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண் டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்


No comments:

Post a Comment