தொழில் முனைவோர்களுக்கான பன்முக முதலீட்டு நிதித்திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 1, 2022

தொழில் முனைவோர்களுக்கான பன்முக முதலீட்டு நிதித்திட்டம்

சென்னை, டிச. 1- தொழில் துறை வளர்ச்சிக் கான பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரும் பரோனா பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் மல்டி அசெட் ஃபாண்ட எனும் திறந்த - நிலை முதலீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இதில் திரட்டப்படும் நிதியானது, பங்குச் சந்தை, கடன் மற்றும் தங்க இ.டி.எஃப் திட்டங் களில் முதலீடு செய்யப் படும்.

ஒரே நிதித்திட்ட முதலீடு மூலம் அனைத்து வகையான தனிநபர் சொத்து நிர்வாகத்தை நிர்வகிப்பது சாத்தியமா கும். இத்திட்ட நிர்வகிப் பாளர்களே மேற்கொள் வதால் சிறந்த திட்டமாக இருக்கும். பங்குச் சந்தை யில் எப்போதாவது வாய்ப்புக் கிடைக்கும் போது முதலீடு செய்யும் முதலீட் டாளர்களுக்கும், அவர்களது முதலீட்டை பன்முக முதலீடுகளில் முதலீடு செய்வதற்கேற்ற தாக குறிப்பாக தங்க முதலீட்டிலும் முதலீடு செய்யப்படும் என இந் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சோனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment