சர்.பிட்டி. தியாகராயர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
சென்னை, டிச.21 நீதிக்கட்சியின் பார்ப்பன ரல்லாதார் கொள்கை அறிக்கை பிரகடன நாளான நேற்று (20.12.2022) மாலை சென்னை மாநகராட்சி வளாகத்திலுள்ள சர்.பிட்டி. தியாகராயர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக பெருநகர சென்னை மாநக ராட்சி மேயர் ஆர். பிரியா அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வரவேற்று புத்தகங்களை வழங்கி சிறப்பித்தார்.
சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு மரி யாதை செலுத்திய பின்னர் மாநகராட்சி ரிப்பன் கட்டடம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தின் முன்பாக, தமி ழர் தலைவர் மேயரிடம் பழைய வரலாற்று நினைவுகளை நினைவு கூர்ந்து, கழக நிர்வாகிகள், தோழர்கள், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிர்வாகிகளுடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். (இந்த விக்டோரியா பொது அரங்கத்தில்தான் 20.12.2016 அன்று "பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை" சர்.பிட்டி. தியாக ராயர் அவர்களால் வெளியிடப்பட்டது).
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், பெருநகர சென்னை மாந கராட்சி மேயர் ஆர். பிரியா, மனோண் மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் வேதகிரி சண்முகசுந்தரம், தமிழ் நாடு திட்டக்குழு மேனாள் துணைவேந்தர் முனைவர் மு. நாகநாதன், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் - தலைவர் முனைவர் பெ. ஜெகதீசன், செயலாளர்கள் பேராசிரியர் அ. கருணானந்தன், முனைவர் ரா. சரவணன், பேராசிரியர் சுந்தரம், பேராசிரி யர் ஜெகன்னாதன், இளஞ்செழியன், கழக துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, மாநில மாண வர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச் செயலா ளர் வி. பன்னீர்செல்வம், சி. வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வட சென்னை மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், துணைத் தலைவர் கி.இராம லிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பெரியார் மாணாக் கன், சோழிங்க நல்லூர் மாவட்ட ப.க. தலைவர் பி.சி. ஜெயராமன், கோ. தங்க மணி, க.கலைமணி, வை.கலையரசன், நா. பார்த்திபன், மகேஷ், கே. சோமசுந் தரம்,கே. செல்லப்பன், தங்க தனலட்சுமி, பூவை. செல்வி, த மரகத மணி மற்றும் தோழர்கள், மாநகராட்சிப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment