கம்போடிய இனப் படுகொலையை நாம் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்கச் சென்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கம்போடியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள நாம் பென்னில் உள்ள Tuol Sleng Genocide அருங்காட்சியகத்திற்கு சென்ற ரூடோ, அங்கு இனப் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஒளிப்படங்களைப் பார்வையிட்டார். இதுதொடர் பாக அவர் வெளியிட்ட பதிவில், ‘இனப் படுகொலையை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. மேலும் இதுபோன்ற அட்டூழியங்கள் மீண்டும் நடக்க அனுமதிக்கக் கூடாது’ என்று தெரிவித்தார். மேலும், இனப் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும், அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான கனடாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் Tuol Sleng Genocide அருங்காட்சியகத்திற்கு சென்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டார். முன்னதாக, கம்போடியா மற்றும் உலகெங்கிலும் கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, எந்த அளவிற்கு செயல்படுகிறோம் என்பது குறித்து விவாதித்ததாக ட்ரூடோ தெரிவித்தார்.
No comments:
Post a Comment